27 வருட சாதனை.. நொறுக்கி தள்ளிய ரவீந்திர ஜடேஜா.. சத்தம் இல்லாமல் மெகா எபெக்ட்!

0
3255
Jadeja

உலகக்கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்தியா நெதர்லாந்து மோதிய கடைசி போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

இதற்கடுத்து இந்திய அணி வருகின்ற 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியைச் சந்திக்கிறது.

- Advertisement -

இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சந்தித்து விளையாட இருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சுத்துறை மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி லீக் சுற்றில் ஒன்பது போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று அசத்தியிருக்கிறது.

இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டை எடுத்துக் கொண்டால் வேகப்பந்துவீச்சாளர்கள் மூவருமே ஒரே முக்கியத்துவத்தையும் கவனத்தையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால், குல்தீப் யாதவ்தான் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் நடப்பு உலகக்கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக அவரே இருப்பார் என்று பலரும் கணித்திருந்தார்கள். ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இவருடைய வேலையை பெரிய அளவில் குறைத்து விட்டார்கள்.

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு பங்களிப்பு என்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆனால் அவர் எப்படியான தாக்கத்தைக் கொண்டு வருகிறார் என்று பார்த்தால், தற்பொழுது அவர்தான் இந்திய அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார் என்கின்ற அளவுக்கு இருக்கிறது.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவர் தற்பொழுது 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற் பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையைப் படைத்திருக்கிறார். 1996ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே 15 விக்கெட் கைப்பற்றியதே இந்திய அளவில் சாதனையாக இருந்து வருகிறது. 27 வருட சாதனை தகர்ந்திருக்கிறது!

ரவீந்திர ஜடேஜா – 16 விக்கெட் – 2023
அனில் கும்ப்ளே – 15 விக்கெட் – 1996
யுவராஜ் சிங் – 15 – விக்கெட் – 2011
குல்தீப் யாதவ் – 14 விக்கெட் – 2023
மனிந்தர் சிங் – 14 விக்கெட் – 1987