சொல்லி வைத்து ஸ்டம்பை அடித்த ரவீந்திர ஜடேஜா 38 ரன்களில் ஸ்டீவன் சுமித் காலி”! – அசத்தல் வீடியோ!

0
1941

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் பார்டர்கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று துவங்கியது. இந்தப் போட்டியின் துவக்க நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி சிறப்பித்தனர்.

தாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் உஸ்மான் கவஜா மற்றும் டிராவஸ் ஹெட் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு மார்னஸ் லபுசேன் முகமது சமீ பந்துவீச்சில் உடனடியாக ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா உடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார் .

- Advertisement -

ஒரு கட்டத்தில் இந்த ஜோடி ஆட்டத்தை இந்திய அணி இடம் இருந்து தங்களின் வசம் எடுத்துக் கொண்டது போல் விக்கெட் விழாமல் மிகவும் நேர்த்தியாக ஆடினர். இதனால் இந்திய அணியின் வீரர்கள் விக்கெட் எடுப்பதற்கு கடுமையாக போராட வேண்டி இருந்தது. சிறப்பாக ஆடிய உஸ்மான் கவஜா இந்தத் தொடரில் தனது மூன்றாவது அரை சதத்தை நிறைவு செய்தார்.

அவருக்கு உறுதுணையாக நின்று ஆடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அவ்வப்போது பௌண்டரிகள் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். ஒரு கட்டத்தில் 75 ரன்கள் இரண்டு விக்கெட்களை இழந்திருந்த ஆஸ்திரேலியா இவர்களது சிறப்பான ஆட்டத்தால் 150 ரண்களுக்கும் ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது .

இந்நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பின்பான ஆட்டத்தில் இரண்டாவது ஓவர் வீசிய ரவீந்திர ஜடேஜா தனது சுழல் பந்துவீச்சின் மூலம் ஸ்டீவன் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். அரௌண்ட் ஸ்டிக்கிலிருந்து ஜடேஜா வீசிய ஆர்ம் பால் ஸ்டீவன் ஸ்மித்தின் கால் காப்பில் பட்டு டிக்கெட்டை சிதறச் செய்தது. இதன் மூலம் இந்திய அணியை மிரட்டிய கவஜா மற்றும் ஜடேஜாவின் 79 ரன் பார்ட்னர்ஷிப் முடிவிற்கு வந்தது . 38 ரன்களை எடுத்திருந்த ஸ்டீபன் ஸ்மித் ஆட்டம் இழந்தார். இதன் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -