அவசர..அவசரமாக சென்னை வந்த ஜடேஜா.. காரணமே வேறு!

0
729

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா தற்போது தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வணக்கம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டுள்ளார். ஜடேஜா ஏன் திடீரென வந்துள்ளார்? ஒரு வேலை சி எஸ் கே தொடர்பாக ஏதேனும் பேச வந்துள்ளரா என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விசாரித்ததில் அவர் சென்னை வந்ததற்கான காரணமே வேறு என்று தெரிய வந்துள்ளது. ஜடேஜா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காயம் ஏற்பட்டு, தொடரிலிருந்து விலகினார். இதனால் டி20 உலககோப்பை தொடரில் ஜடேஜா இடம்பெறவில்லை. அதன் பிறகு வங்கதேச தொடரில் சேர்க்கப்பட்டாலும் ஜடேஜா அதில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் ஜடேஜா தற்போது முழு உடல் தகுதி பெற்று இருக்கிறார். இதனை அடுத்து ஜடேஜாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலில் இரண்டு போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் தேர்வுக்குழு சேர்த்துள்ளது.

ஆனால் ஜடேஜா தனது உடல் தகுதியை போட்டியில் விளையாடி நிரூபித்தால் மட்டுமே பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே அணியில் அக்சர்பட்டேல், குல்திப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ,ஜடேஜா உடல் தகுதி பெற்றாலும் தனது திறமையையும் பார்மையும் நிரூபிக்காத வரை அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி போன்ற நிபுணர்கள் ஜடஜாவை ரஞ்சிப் போட்டியில் விளையாடி தனது பார்மை நிரூபிக்க சொல்லுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தனர். இதனை அடுத்து ரஞ்சிப் போட்டிகள் விளையாடுவதற்கு ஜடேஜா தமிழகம் வந்துள்ளார். நாளை நடைபெறும் ஆட்டத்தில் சவுராஸ்டிரா அணிக்காக களமிறங்கும் அவர் தமிழ்நாட்டை எதிர்கொள்கிறார். இதனை அடுத்து ஜடேஜாவுக்கு தமிழக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் பல்வேறு மீம்ஸ்களை போட்டு ஜடேஜாவை சிஎஸ்கே ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். தமிழ்நாட்டுக்கு எதிராக விளையாட வந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.