கேப்டன்சி பற்றி ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரவீந்திர ஜடேஜா கற்றுக் கொள்ள வேண்டும் – முன்னாள் அயர்லாந்து வீரர் அறிவுரை

0
98
Ravindra Jadeja and Hardik Pandya

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் கடந்த மார்ச் 26-ல் துவங்கி பெரிய அணிகள் அடிவாங்க, ஏலத்தில் சரியாகச் செயல்படவில்லை என்று விமர்சிக்கப்பட்ட புதிய அணியான குஜராத் அணி சாதிக்க என்று எதிர்பாராத நிகழ்வுகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஐ.பி.எல் துவங்கும் முன்னமே பெங்களூர், பஞ்சாப், கொல்கத்தா போன்ற பழைய அணிகளுக்கே கேப்டன் தேவைப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காதவாறு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலக, ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றார்.

- Advertisement -

லக்னோ அணியுடனான போட்டியில் ஆட்டத்தின் 19வது ஓவரை சிவம் துபேவிற்கு தந்தது தொடர்பாக, பலரும் பலதரப்பட்ட விமர்சனங்களையும், அறிவுரைகளையும் சென்னை அணிக்கும், கேப்டன் ஜடேஜாவிற்கும் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் அயர்லாந்து அணியின் முன்னாள் வீரர், நெயில் ஓ ப்ரையன் ஜடேஜாவிற்கு சில அறிவுரைகளை கிரிக்கெட் வீரராகக் கூறி இருக்கிறார்.

அதில் அவர் “தோனி போன்ற பெரிய வீரரின் பொறுப்பை அவர் இடத்திலிருந்து நிறைவேற்றுவது கடினமானது. தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும் தற்போதும் பீல்டிங் மாற்றங்களைச் செய்வதைக் காண முடிகிறது. ஜடேஜா பேட் மற்றும் பவுலிங்கில் ஒரு கேப்டனாக கூடுதல் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் நல்ல பவுலர் எனவே தனது நான்கு ஓவர்களையும் வீசி முடிக்க வேண்டும். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா போல செயல்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -