நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிஎஸ்கே அணியை எதிர்த்து தான் விளையாடியது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது என ரவீந்திர ஜடேஜா கூடியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணிகள் இருந்து ரவீந்திர ஜடேஜா டிரேடிங் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பப்பட்டார். அந்த அணி முதல் சீசனில் சாம்பியன் ஆன பொழுது ரவீந்திர ஜடேஜா அந்த அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறவிட்ட ரசிகர்கள்
நேற்று ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சுக்கு வந்து பழைய முறையில் சிறப்பாக வீசினார். மேலும் ஒரே ஓவரில் சர்பராஸ் கான் மற்றும் சிவம் துபே விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் ராயல்சை போட்டிக்குள் எடுத்து வந்து விட்டார்.
நேற்று அவர் அந்த அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிஎஸ்கே ரசிகர்கள் ரவீந்திர ஜடேஜாவை தவறவிட்டார்கள். மேலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் அவருடைய பெயரை சொல்லி கத்தி அவருக்கு மரியாதை கொடுத்தார்கள்.
உணர்ச்சிகரமாக இருந்தது
இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா பேசும் பொழுது “முதலில் இது எனக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. நான் 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருக்கிறேன். அதனால் இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒரு நேரமாக இருந்தது. ஆனால் இதை என்னுடைய பயணத்தில் ஒரு பகுதியாகவே நினைத்துக் கொண்டேன். மேலும் நான் முதல் ஐபிஎல் பட்டத்தை வென்ற அணி உடன் இணைகிறேன் என்பது நல்ல விஷயம்”
இதையும் படிங்க : தயவு செஞ்சு ஆடுகளத்தை குறை சொல்லாதீங்க.. இது முழுக்க சிஎஸ்கே மேலதான் தப்பு.. ரவிச்சந்திரன் அஸ்வின் வருத்தம்
“நான் இன்னும் மகி பாயுடன் பேசவில்லை. அவருடைய மொபைல் எப்போதும் அணைத்து வைக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை நான் நேரில் சந்திக்கும் பொழுது நிறைய பேசுவேன்” என்று கூறியிருக்கிறார்.






