தயவு செஞ்சு ஆடுகளத்தை குறை சொல்லாதீங்க.. இது முழுக்க சிஎஸ்கே மேலதான் தப்பு.. ரவிச்சந்திரன் அஸ்வின் வருத்தம்

0
42

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையில் ஆடுகளத்தை குறை கூறினால் தான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடுகளத்தின் சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து விரைவில் விக்கெட்டுகளை இழந்ததால் 19.4 அவர்களின் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி சென்னை அணியின் பந்து வீச்சை மிகவும் சுலபமாக எதிர் கொண்டு விளையாடி உள்ளது.

அதிலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்சி 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இந்த சூழ்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சிஎஸ்கே முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை அணி செய்த தவறுகளை சுட்டிக்காட்டி ஆடுகளத்தை குறை சொல்லக்கூடாது என்ற சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ராஜஸ்தான் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட சிறப்பாக தரமாக விளையாடி எல்லா வகையிலும் சென்னை அணியை தோல்வியடைய வைத்தது. தயவு செய்து ஆடுகளத்தை பற்றி யாரும் குறை சொல்லாதீர்கள். இந்த ஆடுகளத்தில் சிறிது ஈரப்பதம் இருந்தது. எனவே சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் இந்த சூழ்நிலையை உணர்ந்து சிறிது நேரம் பொறுமையாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.

தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடச் சென்று விரைவில் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். சாம்சன் ஒரு சிறப்பான உலகக் கோப்பைக்கு பிறகு வந்தார். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று அவர் வேகத்தை மாற்ற வேண்டி இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இது சிறிது நேரம் எடுத்துக் கொண்டு அதற்கு பிறகு விளையாட வேண்டிய ஆடுகளமாகும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -