நான் ஓய்வு பெறும் வரை இது நடக்காதுனு நம்பினேன்.. ஆனா அந்த சோகம் நடந்துடுச்சு – ஜடேஜா வருத்தம்

0
554
Jadeja

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் நாளுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜா நடைபெறும் டெஸ்ட் தொடர் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இந்திய அணி 12 வருடங்களுக்கு பிறகு உள்நாட்டில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இதுவரை தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை உள்நாட்டில் இழக்காமல் இந்திய அணிஇருந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு நீண்ட காலமும் இவ்வளவு தொடர் தோல்வி இல்லாமலும் எந்த அணியும் உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயணித்ததில்லை.

- Advertisement -

மீண்டு வந்த ரவீந்திர ஜடேஜா

இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைவதற்கு இந்திய அணியின் பேட்டிங் மட்டும் இல்லாமல், ரவீந்திர ஜடேஜா வழக்கம்போல் பந்துவீச்சில் தாக்கத்தை கொடுக்க முடியாததும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. நியூசிலாந்து அணியின் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கூட அவரால் பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்க முடியவில்லை.

அதே சமயத்தில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக எதிர்பார்ப்பதை விட குறைவாக 235 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து அணி சுருண்டது.

- Advertisement -

என் வாழ்நாளில் நடக்காது என்று நம்பினேன்

இந்த டெஸ்ட் தொடர் குறித்து பேசி இருக்கும் ரவீந்திர ஜடேஜா கூறும் பொழுது ” தனிப்பட்ட முறையில் நான் விளையாடும் காலம் வரையில் இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை நாங்கள் இழக்க மாட்டோம் என்று நான் நினைத்தேன். நாங்கள் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து வென்று வந்திருக்கிறோம். ஆனால் தற்பொழுது நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம். கடைசியில் இது நடந்து விட்டது. ஆனாலும் நான் ஆச்சரியப்படவில்லை”

இதையும் படிங்க : அஸ்வின் வேண்டாம்.. வாஷிங்டன் சுந்தருக்கு இந்த திறமை இருக்கு.. ஆஸியில் வாய்ப்பு கொடுங்க – சைமன் டால் கருத்து

“நாங்கள் எங்கள் மீது நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டோம். 12 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்து வந்தோம். நான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியாவில் விளையாடிய காலத்தில் மொத்தம் ஐந்து போட்டிகள் மட்டுமே தோற்று இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இப்படி இருக்கும் பொழுது நாங்கள் தோல்வி அடைந்ததால், அது நிறைய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. நாங்கள் மீண்டும் திரும்பி வந்து இதற்கு பதிலடி கொடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -