நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அஸ்வினை தாண்டி வாஷிங்டன் சுந்தருக்கு விளையாடும் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் கூறியிருக்கிறார்.
இந்திய அணி இந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கி நடைபெறுகிறது.
அறிவிக்கப்பட்ட இந்திய அணி
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவர் இடம் பெற்று இருக்கிறார்கள். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் வலதுகை ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இந்திய அணி ஆஸ்திரேலியாலில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து சமீபத்தில் விளையாடுவதில்லை. ரவீந்திர ஜடேஜாவை பேட்டிங் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டராக வைத்துக் கொண்டு, நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை இப்படி செல்லக்கூடாது என சைமன் டால் இந்திய அணிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
இவர்கள் இருவரும் இருக்க வேண்டும்
இதுகுறித்து சைமன் டால் கூறும் பொழுது “வாஷிங்டன் சுந்தருக்கு பந்துவீச்சில் நல்ல திறமை இருக்கிறது. அவர் பந்தை நன்றாக வழுக்கிக் கொண்டு செல்லும்படி வீசுகிறார். மேலும் அவருடைய பந்தில் நல்ல ஸ்பின் இருக்கிறது. மேலும் அந்த பந்து நல்ல உயரத்தில் பவுன்ஸ் ஆகியும் செல்கிறது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர் தகுதி உள்ளவராக மாறுகிறார்”
இதையும் படிங்க : விராட் கோலி மனசுல என்ன இருக்கு.. விக்கெட்டை ஏன் இப்படி வீண் பண்றீங்க? – ரவி சாஸ்திரி விமர்சனம்
“மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியினர் தங்களின் சிறந்த ஐந்து பந்துவீச்சாளர்களை கொண்டு களம் இறங்க வேண்டும். இந்த வகையில் அவர்கள் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் இருக்க வேண்டும். நான்கு வேதப்பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணி செல்லக்கூடாது” என்று கூறியிருக்கிறார்