தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக சென்னை அணியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள ரவீந்திர ஜடேஜா

0
59
Dhoni Raina and Jadeja

நடப்பு ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது நான்காவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான விளையாடிக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்துள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 35 பந்துகளில் 48 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -
சென்னை அணிக்கு 150வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ரவீந்திர ஜடேஜா இன்று தன்னுடைய 150வது போட்டியில் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு 150 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மட்டுமே. அவர்கள் வரிசையில் இன்று ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று தன்னுடைய 150வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 23 ரன்கள் குவித்துள்ளார்.

அதேபோல ஐபிஎல் தொடரில் இதுவரை 150 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் ஒரு சிலர் மட்டுமே. மும்பை அணிக்கு கீரோன் பொல்லார்ட், ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சென்னை அணிக்கு தன்னுடைய 150வது ஐபிஎல் போட்டியில் ஒரு கேப்டனாக இன்று ரவீந்திர ஜடேஜா விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.