600 விக்கெட்.. டாப் 5 ஜாம்பவான்கள் லிஸ்டில் ஜடேஜா.. இந்திய கிரிக்கெட்டில் படைத்த மகத்தான சாதனை.. முழு விவரம்

0
465

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஸ்பின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்துள்ள நிலையில் அதற்குப் பிறகு இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து பேட்டிங்கை துவங்கியது. முதலில் இங்கிலாந்து அணி அதிரடியாக துவங்கினாலும் அதற்குப் பின்னர் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

இதில் குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை 19 ரன்னில் வீழ்த்தினார். அதற்குப் பின்னர் ஜேக்கப் பெத்தல் 51 ரன் மற்றும் அடில் ரஷீத் 8 ரன்னில் ரவீந்திர ஜடேஜா வெளியேற்றினார். இந்த போட்டியில் மொத்தம் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நுழைந்தார்.

- Advertisement -

இந்திய ஜாம்பவான்கள் பட்டியலில் நுழைந்தார்

80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 323 விக்கெட்டுகள், 198 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 223 விக்கெட்டுகள் மற்றும் 74 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று விக்கெட்டுகள் வீழ்த்துவதற்கு முன்பாக 597 விக்கெட்டுகளுடன் ஜாகீர் கானோடு கூட்டணியில் இருந்த ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

இதையும் படிங்க:ஜனவரியில் கழுத்து பிப்ரவரியில் முழங்கால்.. என்னாச்சு விராட் கோலிக்கு – ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட முக்கிய தகவல்

இதில் முதலிடத்தில் இந்தியாவின் கும்ப்ளே 401 போட்டிகள் விளையாடி 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 287 போட்டிகளில் விளையாடி 765 விக்கட்டுகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்திலும், 365 போட்டிகளில் விளையாடி 707 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 303 போட்டிகளில் விளையாடி 597 விக்கெட்டுகளுடன் ஜாகிர் கான் 6வது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -