ஜனவரியில் கழுத்து பிப்ரவரியில் முழங்கால்.. என்னாச்சு விராட் கோலிக்கு – ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட முக்கிய தகவல்

0
183

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விளையாடாததை அடுத்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரராக திகழும் விராட் கோலி காயம் அடைவது என்பது கிரிக்கெட்டில் நடைபெறும் அரிதான விஷயங்களில் ஒன்றாகும். ஏனென்றால் விராட் கோலி எந்த ஒரு போட்டியையும் தவறவிடாமல் விளையாடுவார் என்கிற நிகழ்வு தான் பெரும்பாலும் இருக்கும். அந்த அளவிற்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் விராட் கோலிக்கு நிகர் அவர் மட்டுமே தான். உணவு பழக்கவழக்கம், பிட்னஸ் என ஒரு கிரிக்கெட் வீரருக்கு தேவையான என்ன தேவையோ அதனை அப்படியே வைத்திருப்பார்.

இந்த சூழ்நிலையில் தற்போது நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் போடும்போது ரோஹித் ஷர்மா முழங்கால் காயம் காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவித்தார். அதேபோல கடந்த மாதத்தில் ரஞ்சி டிராபி தொடரில் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக ரஞ்சி டிராபியை தவறவிட்டார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சமூக வலைதளத்தில் இது குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா ஆச்சரிய பதிவு

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஜனவரியில் கழுத்து, பிப்ரவரியில் முழங்கால். உடல் தகுதி பிரச்சனை காரணமாக விராட் கோலி கிரிக்கெட் போட்டியை தவற விடுவது நீங்கள் அடிக்கடி பார்த்திராத ஒரு அரிதான நிகழ்வாகும். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்து கட்டாக்கில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி நிச்சயம் விளையாடுவார்” என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:136 ரன் 8 விக்கெட்.. மீண்டும் இலங்கை சொந்த மண்ணில் பரிதாப நிலை.. ஸ்மித்தின் ஆஸி அணி அசத்தல்

இதனால் அடுத்த ஒரு நாள் போட்டியில் விராட் கோலி இந்திய அணிக்காக நிச்சயம் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அதற்குப் பின்னர் தற்போது பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 21 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -