ரோகித் கிட்ட இதை செய்யாதீங்கப்பா.. ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்க பண்ணுங்கனு சொன்னா கேட்கிறது இல்லை – அஸ்வின் கருத்து

0
2
Ashwin

நேற்று கேகேஆர் அணிக்கு எதிராக ரோகித் சர்மா 38 பந்தில் 78 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸ் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோகித் சர்மா ஐந்து கோப்பைகளை வென்ற போதிலும் பேட்ஸ்மேன் ஆக அவருக்கு பெரிய சாதனைகள் எதுவும் இருந்ததில்லை. ஆனால் கடந்த வருடமும் இந்த வருடமும் அவர் ஒரு புதிய உத்வேகத்துடன் விளையாடி வருகிறார்.

- Advertisement -

19 வருடத்தில் முதல் முறை

ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் தனது அதிவேக அரை சதத்தை 25 பந்தில் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்றைய போட்டியில் அவர் 23 பந்தில் அரைசதம் அடித்தார். இதன் மூலம் 19 வருடங்கள் தாண்டி அதிவேக அரை சதத்தை கொண்டு வந்திருக்கிறார்.

மேலும் நேற்றைய போட்டியில் மைதானத்தில் இரண்டு பக்கங்களிலும் அவர் சிக்ஸர்கள் அடித்தது சிறப்பான விஷயமாக இருக்கிறது. இது வழக்கமான ரோகித் சர்மாவை விட அதிரடியான பேட்டிங் அப்ரோச்சாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரூல்சை பாலோ பண்ணுங்கப்பா

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இதற்கு முந்தைய போட்டியில் விராட் கோலி சிறப்பாக ஆடி இருந்தார். நான் விண்டேஜ் விராட் கோலி வரப்போகிறார் 900 ரன்கள் தாண்டி எடுக்கப் போகிறார் என்று சொல்லி இருந்தேன். ஆனால் நேற்று ரோகித் சர்மா விளையாடியதை பார்க்கும் பொழுது இது எந்த வகையான ரோகித் சர்மாவும் இல்லை, புது மாதிரியான ரோகித் சர்மா என்று தெரிகிறது”

இதையும் படிங்க : கிரீன் ஏன் பவுலிங் பண்ணல?.. இத போய் ஆஸ்திரேலியா கிட்ட கேளுங்க.. ரகானே கோபம் – என்ன நடந்தது?

“ரோகித் சர்மாவுக்கு ஷார்ட் பால் போடாதீங்கப்பா ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க பண்ணுங்கனு சொன்னா கேட்கலையே நீங்க. அவருக்கு அந்த பந்துகளை சாதாரணமாக அடிப்பார். அவருடைய வேகம் வீலை பார்க்கும் பொழுது இரண்டு பக்கத்திலும் அம்புக்குறிகளாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -