நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் பந்து வீசவில்லை. இதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் போய் கேளுங்கள் என அந்த அணியின் கேப்டன் ரகானே கூறியது பரபரப்பாக மாறி இருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 220 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி வெகு எளிதாக 19.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
ரகானே கருத்து
இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. அந்த அணிக்கு பதிரனா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் காயம் காரணமாக விளையாடாதது பின்னடைவை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து பேசிய ரகானே கூறும்பொழுது “நான் முதலில் பந்துவீச்சை கேம் கிரீனை வைத்து ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. அவரை ஏன் பந்து வீச வைக்கவில்லை என்ற உங்கள் கேள்விக்கு நீங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் போய் தான் பதில் கேட்க வேண்டும்” என்று கூறினார்.
காரணம் என்ன?
இந்த ஐபிஎல் தொடருக்கு கேமரூன் கிரீன் வரும் பொழுதே அவர் காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள காரணத்தினால் அவர் பந்து வீச மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. எனவே அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார்.
இதையும் படிங்க : கேகேஆர் செஞ்சது முட்டாள்தனமான ஒரு விஷயம்.. கிரீன் விஷயத்தில் இதை முன்னாடியே யோசிச்சு இருக்கணும் – சிஎஸ்கே முன்னாள் வீரர்
இதன் காரணமாகவே அவர் நேற்று பந்துவீச்சுக்கு வரவில்லை. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல் பல இந்திய முன்னாள் வீரர்களை கோபப்படுத்தி உள்ளது. தற்போது கேப்டன் ரகானேவும் இதற்கு கோபமாகவே பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






