அஷ்வின் 500வது விக்கெட்.. அனில் கும்ப்ளே ஷேன் வார்னே சாதனைகள் முறியடிப்பு.. தனி ஒரு இந்தியராக முத்திரை

0
499
Ashwin

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணிக்காக விளையாடும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது 500 ஆவது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றி மாபெரும் சாதனைகளை படைத்திருக்கிறார்.

இந்தியாவில் சமீப காலத்தில் குழப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே 500 ஆவது சர்வதேச டெஸ்ட் விக்கட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றுவார் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் இந்தத் தொடருக்கு இதுவரையில் மூன்று போட்டிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய சாதகமாகவே இருந்த காரணத்தினால், அவருடைய மகத்தான சாதனை தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடையும் பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் 499 சர்வதேச டெஸ்ட் விக்கட்டுகள் கைப்பற்றி இருந்தார்.

இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணியின் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியில் முக்கியமான 37 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து இங்கிலாந்துக்கு முதல் இன்னிங்ஸ் அதிரடியாக துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் ஆரம்பித்தார். ஓவருக்கு ஆறு ரன்கள் வீதம் இங்கிலாந்து மிக வேகமாகரன் சேர்க்க ஆரம்பித்தது. பென் பக்கெட் அதிரடியாக அரை சதம் அடித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடியை கட்டுப்படுத்த ரோகித் சர்மா ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு வந்தார். இதற்கு கை மேல் பலனாக துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி விக்கெட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார். இது அவருக்கு 500 ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விக்கட்டாக அமைந்தது. 97 டெஸ்டில் 184 இன்னிங்ஸ்களில், 23.92 சராசரியில், 500 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதில் 34 முறை 5 விக்கெட்டுகளையும், எட்டு முறை ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் இந்திய அதிவேகமாக 500 வது விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்கின்ற சாதனையை அணில் கும்ப்ளேவை தாண்டி படைத்தார். மேலும் உலக அளவில் அதிவேகமாக 500 வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்கின்ற சாதனையையும் படைத்தார்.

இதையும் படிங்க : “என்னா மாதிரியான பசங்க.. 11 பந்துதான்.. நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன்” – இங்கிலாந்து நிக் நைட் பாராட்டு

முத்தையா முரளிதரன் 144 இன்னிங்ஸ்
ரவிச்சந்திரன் அஸ்வின் 184 இன்னிங்ஸ்
அனில் கும்ப்ளே 188 இன்னிங்ஸ்
சேன் வார்னே 21 இன்னிங்ஸ்
கிளன் மெக்ராத் 214 இன்னிங்ஸ்
நாதன் லயன் 241 இன்னிங்ஸ்