“என்னா மாதிரியான பசங்க.. 11 பந்துதான்.. நான் அப்பவே முடிவு பண்ணிட்டேன்” – இங்கிலாந்து நிக் நைட் பாராட்டு

0
224
Jurel

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருக்கிறது.

நேற்று 326 ரன்கள் ஐந்து விக்கெட் இழப்புக்கு எடுத்ததில் இருந்து, இன்று மேலும் ஐந்து விக்கெட்டுகளை கொடுத்து 119 ரன்கள் சேர்த்து, மொத்தமாக 445 ரன்கள் குவித்து இருக்கிறது.

- Advertisement -

இன்று ஆட்டம் துவங்கியதுமே குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஆட்டம் இழக்க, பேட்டிங் செய்யக்கூடிய கடைசி ஜோடியாக துருவ் ஜுரல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவர் மட்டுமே களத்தில் இருந்தார்கள்.

எனவே இந்திய அணி 400 ரன்கள் கடக்க இந்த ஜோடி குறைந்தபட்சம் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய தேவை இருந்தது. இப்படியான நெருக்கடியான நேரத்தில் அறிமுக வீரர் துருவ் ஜுரல் தன்னுடைய வழக்கத்திற்கு மாறாக மிகப் பொறுமையாக விளையாடி, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்த ஜோடி இந்திய அணியை நானூறு ரன்கள் கடக்க வைத்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்கள் எடுத்து வெளியேற, துருவ் ஜுரல் 46 ரன்கள் எடுத்து தனது முதல் அரை சதத்தை தவறவிட்டார்.

- Advertisement -

இந்த போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான் நேற்று அதிரடியாக விளையாடி எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க, இன்று சூழ்நிலைக்கு தகுந்தவாறு மிகப்பெ பொறுமையாக விளையாடிய இன்னொரு அறிமுக வீரர் துருவ் ஜூரல் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் நிக் நைட் கூறும் பொழுது “இந்தியாவுக்காக அறிமுக ஆட்டத்தில் நல்ல சிறப்பான இரண்டு வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதற்காக இந்தியா உண்மையில் பெருமைப்பட வேண்டும். நேற்று சர்பராஸ் இன்று ஜுரல் இருவரும் விளையாடிய விதம் அருமையாக இருந்தது.

ஜூரல் சூழ்நிலையை புரிந்து மிக அருமையாக விளையாடினார். அவர் உள்ளே வரும்பொழுது உண்மையில் இந்திய அணி சிக்கலில் இருந்தது. அவர் தாமாக முட்டி மோதி வெற்றி பெறுவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது.

இதையும் படிங்க : 119 ரன் 5 விக்கெட்.. துருவ் ஜுரல் பும்ரா கடைசி நேர கலக்கல்.. சேப் ஜோனில் இந்திய அணி

அறிமுக டெஸ்டில் விளையாடக்கூடிய அந்தப் பையன் தானே ஒரு சிறப்பான வழியைக் கண்டுபிடித்தார். இதனால் அவருடைய பார்ட்னர் அஸ்வினுக்கு நல்ல பலம் கிடைத்தது. 11 பந்துகளுக்குப் பிறகு தூரல் தன்னுடைய முதல் ரன்னை எடுத்தார். ஆனால் அவர் விளையாடிய விதத்தைப் பார்த்து அவரால் விளையாட முடியும் என்று நான் நினைத்தேன்” என்று கூறி இருக்கிறார்.