தற்போது கிரிக்கெட் வடிவத்தில் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் செத்துக் கொண்டிருப்பதாக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கவலை தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தை காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபியை தான் தொடர்ந்து பார்க்கும் அளவுக்கு இல்லை என்றும் கூறி இருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டின் அழிவு
சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு படிப்படியாக அங்கிருந்து ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு குறைய ஆரம்பித்தது. டி20 போட்டி அதிரடியாகவும் வேகமாகவும் இருப்பதால் ரசிகர்கள் அதை நோக்கி திரும்பினார்கள்.
இத்துடன் குறைந்த நேரத்தில் போட்டி முடிவது மிக முக்கிய பங்கை வகித்தது. மேலும் வீரர்களும் தாங்கள் அதிக நேரம் களத்தில் செலவு செய்ய தேவையில்லாததால் காயம் அடையும் வாய்ப்பு குறைவதால், இந்த வடிவத்தை விரும்ப ஆரம்பித்தார்கள். மிக முக்கியமாக ஐபிஎல் தொடரின் வெற்றி ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு வரவேற்பை குறைத்தது.
இதை செய்யுங்கள்
இது குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் “தற்போது ஒருநாள் கிரிக்கெட் செத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கு நடக்கும் உலகக் கோப்பைக்கு பிறகு என்ன செய்வார்கள்
என்று பார்க்க வேண்டும். விளையாட்டை விட யாரும் பெரியவர்கள் இல்லை. அதே சமயத்தில் விஜய் ஹசாரே தொடரில் விளையாட ரோகித் சர்மா விராட் கோலி வந்தபோது ரசிகர்கள் வந்தார்கள். விளையாட்டைக் காப்பாற்ற சில நேரங்களில் வீரர்கள் வேண்டும். என்னால் டி20 சையத் முஸ்டாக் அலி தொடரை பார்க்க முடிந்தது போல, ஒருநாள் கிரிக்கெட் விஜய் ஹசாரே டிராபியை பார்க்க முடியவில்லை”
இதையும் படிங்க : நானும் என் தம்பியும் ஒரே மேட்ச்ல அதை செய்யணும்.. இந்த ஷாட் இருக்கு எதையும் பண்ணுவேன் – சர்பராஸ் கான் பேட்டி
“தற்போது டெஸ்ட் மற்றும் டி20 வடிவத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. நீங்கள் கால்பந்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் நான்கு வருடத்திற்கு ஒருமுறைதான் நடத்துகிறார்கள். எனவே கிரிக்கெட்டின் எல்லா வடிவத்திற்கும் நாம் நான்கு வருடத்திற்கு ஒருமுறை தான் உலகக்கோப்பை நடத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






