இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக தொடர்ந்து மிகச்சிறப்பாக ரன்கள் குவித்து வரும் சர்ப்ராஸ் கான் தன்னுடைய வாழ்க்கையின் கனவு என்ன? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய உள்நாட்டு வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்டாக் அலி தொடர்களில் சர்ப்ராஸ் கான் தொடர்ந்து ரன்கள் குவித்து வருவதுடன் அதிரடியாகவும் ரன்கள் குவித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மிரட்டல் பேட்டிங் ஃபார்ம்
நடந்து முடிந்த சையத் முஸ்டாக் அலி தொடரில் மூன்று அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்தை சர்பராஸ் கான் அடித்திருந்தால். தற்போது ஆரம்பித்திருக்கும் விஜய் ஹசாரே டிராபியில் நேற்று கோவா அணிக்கு எதிரான போட்டியில் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இந்த போட்டியில் தன் தம்பியுடன் இணைந்து அவர் விளையாடினார். இவர் அதிரடியாக பெரிய சதத்தை அடிக்க, அவருடைய தம்பி அரை சதம் அடித்து ஆட்டம் இழந்துவிட்டார். இந்த நிலையில் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு என்ன? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இதுதான் என்னுடைய கனவு
இது குறித்து சர்பராஸ் கான் பேசும்பொழுது “நாங்கள் இருவரும் ஒரே ஆட்டத்தில் சதம் அடிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கனவு. கடந்த வாரத்தில் ரஞ்சி தொடரில் நாங்கள் இருவரும் அரை சதம் அடித்திருக்கும் பொழுது எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் நாங்கள் இருவருமே ஆட்டம் இழந்து விட்டோம். ஆனால் நேற்று முசீர் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். எனவே இருவரும் சதம் அடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் முடியாமல் போய்விட்டது”
இதையும் படிங்க : அகர்கர் சர்பராஸ் கானை செலக்ட் செய்யாதது அவமானம்.. நான் நேர்ல பார்த்தேன் – வெங்சர்கார் விமர்சனம்
“இந்தப் போட்டியில் தான் உள்ளே வரும் பொழுது முசீர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அவர்தான் முதலில் அரை சதமும் அடித்தார். ஆனால் ஆட்டம் இழந்து விட்டார். நான் உள்நாட்டு கிரிக்கெட் வடிவத்தில் நிறைய ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். என்னிடம் கட் மற்றும் ஸ்வீப் ஷாட் சிறந்த முறையில் இருக்கிறது. எனக்கு ஒரு போட்டியில் எந்த இடத்தில் ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என தெரியும். மேலும் இந்த வடிவத்தில் வெளியில் 5 பீல்டர்களுக்கு மேல் நிறுத்த முடியாது. இது அடித்து விளையாட வசதியானது” என்று கூறியிருக்கிறார்.






