இந்திய கிரிக்கெட்

விராட் அப்ப செஞ்ச அது எனக்கு பிடிக்கல.. இப்ப அவர் யாருன்னு காட்டிகிட்டு இருக்காரு – அஸ்வின் பேச்சு

தன் திறமை மீது மற்றவர்களுக்கு இருந்த சந்தேகங்களுக்கு விராட் கோலி தற்போது பதில் அளித்துக் கொண்டிருக்கிறார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ந்து இரண்டு சதங்கள் அடித்திருக்கிறார். மேலும் அவருடைய கொண்டாட்டம் பழையபடி ஆக்ரோஷமாகவும் அமைந்திருக்கிறது. இதற்கான காரணம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

எனக்கு அது பிடிக்கவில்லை

இதுகுறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்பொழுது “அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 உலக கோப்பையில் மொகாலியில் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடு இருந்தார். அப்போது நான் அவரிடம் சென்று மிகவும் பாராட்டி இது எப்படிப்பட்ட இன்னிங்ஸ் என்று வியந்து கூறினேன். அதற்கு அவர் மிக சாதாரணமாக சிரித்துக் கொண்டே எப்படிப்பட்ட இன்னிங்ஸ் என்று கேட்டார்”

” அதற்கு மேல் அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. அப்படி விராட் கோலி எதுவும் பேசாமல் தனியாக அடைந்து கொள்ளும் பொழுது, பேசாமல் இருக்கும் பொழுது எனக்கு அது பிடிக்காமல் இருந்தது. அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று எனக்கு தோன்றியது”

- Advertisement -

ஏன் இப்படி கொண்டாடுகிறார்?

” விராட் கோலி தற்போது ஏன் மீண்டும் பழையபடி ஆக்ரோஷமாக கொண்டாடுகிறார்? அவர் இதன் மூலம் ஏதோ பதில் சொல்ல நினைக்கிறார். அவர் எப்படியான விஷயங்களை எல்லாம் கடந்து வந்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் விரும்பி விளையாடினார். ஆனாலும் அவராகவே அதிலிருந்து ஓய்வு பெற்றார். அந்த நேரத்தில் அவர் பேட்டிங் மீது நிறைய கேள்விகள் இருந்தது”

இதையும் படிங்க : ஆசஸ் 2025.. 5 கேட்ச்களை கோட்டைவிட்ட இங்கிலாந்து.. வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி.. 44 ரன்கள் முன்னிலை

” இப்போது இவர்கள் என் திறமையை சந்தேகப்படுகிறார்களா? என்று விராட் கோலி நினைத்திருக்கலாம். அதனால் நான் யார் என்று உங்களுக்கு நிரூபித்து காட்டுகிறேன் என்று அவருக்கு தோன்றி இருக்கலாம். மேலும் இப்படி செய்யும் பொழுது தானாக அவுட் ஆகும் சூழ்நிலையும் வரலாம். ஆனால் இப்போது நீங்கள் என்னை சந்தேகப்பட்டதற்கு நான் உங்களுக்கு யார் என்று காட்டி விட்டேன் என அவர் நினைப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by