இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றி குறித்து இந்திய அணியின் இளம் கேப்டன் ஷப்மன் கில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அணியின் செயல்பாடு குறித்து ஷப்மன் கில் பேசும்போது “நாங்கள் வெற்றி பெறும் வரை அனைத்தும் நல்லதே… அங்கு பேட்டிங் செய்வது அவ்வளவு ஈசியாக இல்லை. நாங்கள் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தோம் என்று நினைக்கிறேன். அவர்களை 130-140 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது நல்லது. ஒரு கட்டத்தில் இது ஒரு ஈசியான டார்கெட் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம். இறுதியில் நாங்கள் வெற்றிக் கோட்டைத் தாண்டினோம்.”
”குர்னூர், கடந்த மேட்சிலும் கூட, உண்மையிலேயே மிகச் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அவர் மேலும் பல மேட்ச்கள் விளையாடி அதிக எக்ஸ்பீரியன்ஸ் பெறும்போது, தனது லைன் மற்றும் லென்த்தில் மிகவும் கன்சிஸ்டன்ட் ஆக மாறுவார் என்று நம்புகிறேன். அவரிடம் பேஸ் இருக்கிறது, பவுன்ஸ் இருக்கிறது. அவர் எந்தளவுக்கு கன்சிஸ்டன்ட் ஆக இருக்க முடியும் என்பதுதான் விஷயம், இதேபோல் அவரால் தொடர்ந்து பவுலிங் செய்ய முடிந்தால் எந்த மாதிரியான குவாலிட்டியைக் கொண்டு வர முடியும் என்பதை இன்று நாம் பார்த்தோம்.”
”இளம் பவுலர்கள் பெரும்பாலோரிடம் தேவையான அனைத்து குவாலிட்டிகளும் உள்ளன. பிரஷரில் எப்படி பெர்ஃபார்ம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். இன்டர்நேஷனல் கிரிக்கெட் என்பதே பிரஷரில் பெர்ஃபார்ம் செய்வது, அந்த எக்ஸ்பீரியன்ஸைப் பெறுவது, தினமும் பவுலிங் செய்து பிரஷரிலும் டெலிவர் செய்ய முயற்சிப்பதுதான். அதுவே நமக்கான முக்கிய பாயிண்ட்”
“ஆமாம், பிட்ச் நிச்சயமாக சேலஞ்சிங் ஆக இருந்தது. ஆனால் இறுதியில் நாங்கள் விரும்பியதை விட இரண்டு விக்கெட்டுகளை எக்ஸ்ட்ராவாக இழந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். இறுதியில் மழை வரக்கூடும் என்பது எங்களுக்குத் தெரியும். கடைசியாக நாங்கள் ஆடிய இரண்டு ஷாட்களும்… சரியாகத் தெரியவில்லை. டிஎல்எஸ் முறையில் நான்கு அல்லது ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இந்த மேட்சை நாங்கள் தோற்றிருந்தால், அது நிச்சயமாக எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆனால் வெற்றிக் கோட்டைத் தாண்டியதில் மகிழ்ச்சி.” என்று கூறி இருக்கிறார்.