ஆசஸ் 2025.. 5 கேட்ச்களை கோட்டைவிட்ட இங்கிலாந்து.. வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி.. 44 ரன்கள் முன்னிலை

0
7

ஆசஸ் 2025 ஆம் ஆண்டு தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தை பயன்படுத்தி பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 334 ரன்கள் குவித்தது. இதில் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் தொடங்கியது.

- Advertisement -

ஆஸி.அபார ஆட்டம்:

தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் மற்றும் ஜெக் வெதரால்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். ஹெட் 33 ரன்களில் ஆட்டம் இழக்க, ஜாக் வெதரால்ட் 72 ரன்கள் எடுத்தார். நடுவரிசையில் மார்னஸ் லாபஸ்சென் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 ரன்கள் சேர்த்தார்.

அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 85 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதே போன்று அதிரடி ஆல்ரவுண்டர் கேமரன் கிரீன் 45 ரன்கள் எடுத்தார். தற்போது இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியாவிற்கு ஆறு விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்திருக்கிறது. அலெக்ஸ் காரி 46 ரன்களுடனும், மைக்கேல் நேசர் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியா முன்னிலை:

இது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 44 ரன்கள் கூடுதல் ஆகும். கைவசம் இன்னும் நான்கு விக்கெட்டுகள் இருக்க ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் கூடுதலாக 100 ரன்களை சேர்க்க முயற்சி செய்யும். இதனை அடுத்து மாலை நேரத்தில் மீண்டும் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக சிறிது நேரம் செயல்படும்.

இதையும் படிங்க: குளியலறையில் அழுதேன்.. பயிற்சி செய்யாமல் டூர் போலாம் என நினைத்தேன்.. ரியான் பராக் கருத்து

இதனை பயன்படுத்தி இங்கிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முயற்சி செய்யும். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பந்து இரவு நேரத்தில் ஸ்விங் ஆகவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இங்கிலாந்து பந்துவீச்சை பொறுத்தவரை பிரைடன் கர்ஸ் மூன்று விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கின்றனர். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பில்டர்கள் ஐந்து கேட்ச்களை தவறவிட்டது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -