இந்திய கிரிக்கெட்

வெறும் 135 ரன்.. பயம் காட்டிய படலம்.. இந்திய அணி வித்தியாச வெற்றி.. நியூசிலாந்து பரிதாபம்

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழையின் காரணமாக டக்வார்த் லீவிஸ் விதிப்படி நான்கு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக 47 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக டேரில் மிட்சல் 104 பந்துகளில் 55 ரன்கள், மிட்சல் சான்ட்னர் 38 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 135 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் குர்நூர் பிரார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கில் ரன் இல்லாமலும், ரோகித் சர்மா 23, விராட் கோலி 7, ஸ்ரேயாஸ் ஐயர் 30, அக்சர் படேல் 7, நமன் திர் 12, அன்சூல் காம்போஜ் 1, கேஎல்.ராகுல் 26, ஆகிப் நபி 1 ரன்கள் எடுக்க, இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்த பொழுது மழை பெய்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து மழை நிற்காத காரணத்தினால் இந்திய அணி நான்கு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒருவேளை இந்த போட்டியில் நடைபெற்று இருந்தால் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இந்த நிலையில் இந்திய அணி அதிர்ஷ்டவசமாக மழையால் வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -
Published by