சூர்யகுமார் செய்யும் இந்த விஷயத்தை நான் முழுசா வெறுக்கிறேன்.. டி20 WCக்கு முன்னாடி இதை கைவிடுங்க – அஸ்வின் கோரிக்கை

0
12

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி இதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் செய்கிற விஷயம் தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆன இந்திய அணி இதற்காக தீவிரமான முறையில் தயாராகி வருகிறது. கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நிலையில் இந்த முறை கோப்பையை எப்படியாவது வென்று விட வேண்டும் என்கிற முனைப்பில் ஆர்வம் கட்டி வருகிறார்கள்.

இதனால் அதிக ஆல் ரவுண்டர்களை அணியில் சேர்ப்பது மற்றும் தேவைக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டர்களை மாற்றும் வழக்கம் தற்போதைய இந்திய அணியில் நடைமுறையில் இருந்து வருகிறது. இதை கவனித்த அஸ்வின், இந்த மாற்றம் இந்திய வீரர்களிடையே பாதுகாப்பற்ற நிலையை குறிப்பதாகவும், சூரிய குமார் எக்காரணம் கொண்டும் தனது பேட்டிங் வரிசையையும் மற்ற பேட்டிங் வரிசைகளையும் மாற்றம் செய்யக் கூடாது என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சூரியகுமார் யாதவ் மிகவும் திறந்த மனதுடையவர் அணிக்காக எந்த விஷயத்தையும் செய்யக்கூடியவர் என்று நான் நினைக்கிறேன். தன்னலம் இல்லாத மனிதர், மற்றவர்களுக்காக தனது பேட்டிங் வரிசையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடிய நபராக இருக்கிறார். ஆனால் இது உலகக்கோப்பைக்கு முன்னதாக முன்னேறுவதை நான் வெறுக்கிறேன்.

இதையும் படிங்க:பக்கத்துல இருந்தா பும்ராவ ஆட வேண்டாம்னு சொல்லுவேன்.. அவர் எதுக்காக ஆடனும்? – அஸ்வின் கருத்து

இந்திய அணி தற்போதைய டி20 வடிவில் மிகவும் வலுவான மற்றும் எதிரணிகளை அச்சுறுத்தக் கூடிய வகையில் உள்ளது. ஆனால் அதிக சுதந்திரத்துடன் விளையாடுவது அதிக சேதத்தையே ஏற்படுத்தக் கூடும். எனவே நான் பார்க்க விரும்பாத கடைசி விஷயம் பேட்டிங் வரிசைகளை மாற்றுவது மற்றும் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வீரர்கள் எந்த இடத்தில் ஆடுவார்கள் என்று அவர்களுக்கு சரியான புரிதல் இல்லாமல் போவது. அடுத்த சில மாதங்களுக்கு இது தவிர்க்கப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -