பக்கத்துல இருந்தா பும்ராவ ஆட வேண்டாம்னு சொல்லுவேன்.. அவர் எதுக்காக ஆடனும்? – அஸ்வின் கருத்து

0
42
Ashwin

இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பூம்ராவுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை ஒன்றை கூறியிருக்கிறார். அவரை தேவையில்லாத போட்டிகளில் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் அரிய வீரராக பும்ரா இருக்கிறார். அவருடைய பந்துவீச்சு முறை மிகவும் வித்தியாசமாக இருப்பதால் அவர் காயம் அடைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பும்ராவை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

விளையாட விடமாட்டேன்

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” எனக்கும் அவருக்கும் ஒரு சிறந்த நட்பு இருக்கிறது. நான் அவருக்கு அருகில் இருந்தால் அவரிடம் சென்று நீங்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் இப்போதைக்கு விளையாடுங்கள் என்று சொல்லுவேன். எங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்பொழுது மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாருங்கள் என்று சொல்லுவேன்”

“ஆனாலும் எனக்கு அவரை தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட மிகவும் விரும்புகிறார். தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். இது சவாலான காரியம் என்பது அவருக்கு நன்றாக தெரியும்”

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் வேண்டாம்

“இந்திய கிரிகெட்டுக்காகவும், அவருக்காகவும் அவர் டி20 கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் அர்த்தமற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நான் விரும்ப மாட்டேன். மேலும் நான் அவரை வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட வைப்பேன். சொந்த மண்ணில் விளையாடும் பொழுது வேறு வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க நினைப்பேன்”

இதையும் படிங்க : எனக்கு இந்தியாவை ஜெயிக்கிறதுதான் முக்கியம்.. அந்த நாளை மறக்கவே முடியாது – பாபர் அசாம் பேட்டி

“பும்ரா நமக்கு ஒரு பொக்கிஷம். அவருடைய செயல்முறை மிகவும் வித்தியாசமானது. அவருடைய பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியம். எதிர்காலத்தில் இது நிறைய சிக்கல்களை உருவாக்கலாம். எனவே நாம் அவரை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -