அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய டி20 அணியில் மாற்றங்கள் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்திருக்கிறார்.
இந்திய அணி சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அடுத்து விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களில் இந்திய டி20 அணியில் பரிசோதனை முயற்சிகள் இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் நம்புகிறார்.
“டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களை நாம் ஒன்றாக பார்க்க கூடாது. எப்பொழுதும் அவை தனியாக இருக்க வேண்டும். ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அடித்து விட்டு இங்கே வர முயற்சி செய்யவில்லை. அவர் டி20 கிரிக்கெட் 160 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். மேலும் பவர் பிளேவில் அவர் இதற்கும் அதிகமாக அட்டாக் செய்து விளையாடுகிறார்”
“இன்று இந்தியாவில் அபிஷேக் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் மிகவும் ஆக்ரோஷமான தொடக்க வீரர்கள். அதே சமயத்தில் நெருப்பும் பணியும் வேண்டுமென்றால் அபிஷேக் ஷர்மா கில் சரியாக இருக்கிறார்கள். இந்த இடத்தில் கில்லுக்கு சரிசமமான போட்டியாளராக ருதுராஜ் வருகிறார்”
“டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாம் வித்தியாசமான சில காம்பினேஷன்களை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். எங்கள் அணியில் ஒரு சிறிய மாற்றம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். சிறிய அல்ல கொஞ்சம் பெரியதாகவே இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : சாம்சனை வாங்க சிஎஸ்கே போட்டி போட்டாலும்.. அவருக்காக அந்த விஷயத்தை மட்டும் தியாகம் செய்ய மாட்டாங்க – அஸ்வின் கருத்து
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் கில் இடம்தான் பிரச்சனையாக இருக்கிறது என அவர் கூறியிருக்கிறார். அவரை மாற்றுவதற்கு கம்பீர் யோசிக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கில் இடத்தில் ஜெய்ஷ்வால் விளையாட வைக்கப்படலாம் என்று தெரிகிறது.