19வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அடுத்த சீசனுக்கான பேச்சுக்கள் இப்போது தொடங்க ஆரம்பித்து விட்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையப் போகிறார் என்று செய்திகள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இந்த தகவல் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து இருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்த சஞ்சு சாம்சன் கடந்த சீசனில் ஒரு சில ஆட்டங்களை தவிர்த்து காயம் காரணமாக பல போட்டிகளில் பங்கு பெறவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக தலைமை தாங்கினார். மேலும் அப்போதே சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேறுகிறார் என்ற தகவல்கள் பரவியது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் ஷாம் கரன் இருவரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து அந்த அணியில் இருந்து சாம்சனை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் நேற்று இந்த விஷயம் உண்மை என்று கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த நிகழ்வு குறித்த சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். சாம்சன் ஏற்கனவே டெல்லி அணியில் இணைவதற்கு இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நிகழ்தன என்றும் ஆனால் அது கடைசி நிமிடத்தில் நடைபெறாமல் போனது என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேற விரும்புகிறார் என்று அனைவருக்கும் தெரியும். மற்ற அணிகள் அனைத்தும் அவரது திறன் மற்றும் திறமை மீது ஆர்வமாக இருக்கின்றன என்று தெரியும். இருப்பினும் இது அவரது மறுபக்கத்தை பலவீனப்படுத்துகிறது. என் பார்வையின்படி டெல்லி அணியில் சமீர் ரிஸ்வி மற்றும் ஸ்டெப்ஸ் ஆகிய இருவரும் சாம்சனுக்காக மாறப் போவதாக இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் அது கடைசி நிமிடத்தில் நடைபெறாமல் போனது. என்னை பொருத்தவரை டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு பெரும்பாலாக சாதகமாக இருக்கும் நிலையில் அது சாம்சனுக்கு சிறப்பாக இருந்திருக்கும்.
இதையும் படிங்க:பேட்டிங் ஆர்டரை கலைச்சி தான் போடுவேன்.. கண்டபடி வீரர்களை அனுப்புவேன்.. காரணம் இதுதான் – கம்பீர் விளக்கம்
ஐபிஎல் தொடரில் நீங்கள் அதிக ரன்கள் எடுத்தால் வெளிச்சத்தில் இருப்பீர்கள் இது சாம்சனுக்கு நன்றாக தெரியும். இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிலைமை மாறிவிட்டது. சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை ஒப்பந்தத்திற்காக வீரர்களை மாற்றியது கிடையாது. ஆனால் சாம்சன் போன்ற உயர்தர வீரர் ஒரு கேப்டன் மற்றும் தொடக்க வீரரை மாற்ற முடியாது என்று அஸ்வின் பேசியிருக்கிறார். அதாவது சாம்சன் தொடக்க இடத்தில் விளையாடி வருவதால் சென்னை அணியில் அவர் இணைந்தாலும் அவருக்காக தொடக்க இடம் மற்றும் கேப்டன் ருத்துராஜை மாற்ற மாட்டார்கள் என்று கூறி இருக்கிறார்.






