இந்திய கிரிக்கெட்

கம்பீர் கில் செஞ்சிகிட்டு இருப்பது மோசமானது.. என்னால இதை நம்பவே முடியல – அஸ்வின் விமர்சனம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் தேர்வு மோசமாக இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணி நிர்வாகம் பேட்டிங் வரிசையில் கடைசி கட்டத்தில் ரன்கள் வேண்டும் என்பதற்காக அதிக ஆல்ரவுண்டர்களை வைத்து விளையாடி வருகிறது. இந்த அணுகுமுறை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

தொடரின் ஆரம்ப எதிர்பார்ப்பு

இங்கிலாந்து அதிரடியாக பேட்டிங் செய்யும் என்கின்ற காரணத்தினால் இந்தியாவின் தாக்குதல் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஆரம்பத்திலேயே வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என வெளியில் இருந்து பல முன்னால் வீரர்கள் கூறி வந்தார்கள். இப்படியான நிலையில் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

மேலும் இங்கிலாந்தில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்படுவதால் விக்கெட் கைப்பற்றக்கூடிய பந்துவீச்சாளர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இருந்த போதிலும் கம்பீர் மற்றும் கில் அடங்கிய நிர்வாக குழு தாக்குதல் பந்துவீச்சாளரை தேர்வு செய்யாமல் தவிர்த்து வருகிறார்கள்.

- Advertisement -

என்னால் நம்ப முடியவில்லை

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் “இனி இங்கிலாந்தில் கடைசிக் கட்ட பேட்ஸ்மேன்களிடம் இருந்து வரும் ரன்கள் எந்த விதத்திலும் பயன் தராது. ஏனென்றால் இங்கிலாந்தில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே விக்கெட் கைப்பற்றக்கூடிய பந்து வீச்சாளர்கள் தேவையாக இருக்கிறார்கள். ஆனாலும் குல்தீப் யாதவை தேர்வு செய்யாமல் இருந்து வருகிறார்கள்”

இதையும் படிங்க : பண்ட்க்கு மட்டும் அது நடந்திருந்தா.. நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும்.. நல்லவேளை தப்பிச்சாரு – ரிக்கி பாண்டிங்

“இந்த டெஸ்ட் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் குல்தீப் யாதவ் விளையாட மாட்டார் என்று யாராவது என்னிடம் சொல்லி இருந்தால் நான் அதை நம்பி இருக்க மாட்டேன். ஆனால் தற்போது அவரை விளையாட வைக்கவில்லை. அணியில் ஏற்கனவே இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கலாம். அதில் ஜடேஜா சிறப்பு பேட்ஸ்மேனாக மாறிவிட்டார். வாஷிங்டன் சுந்தரும் நன்றாக பேட்டிங் செய்கிறார். இப்படி இருக்கும் பொழுது தாராளமாக குல்தீப் யாதவை விளையாட வைக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by