பண்ட்க்கு மட்டும் அது நடந்திருந்தா.. நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும்.. நல்லவேளை தப்பிச்சாரு – ரிக்கி பாண்டிங்

0
117

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணிக்கு பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாட துவங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த விதம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் காயம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டு தினங்களுக்கு முன்பாக மான்செஸ்டரில் துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. இதில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் நாளில் களத்தை விட்டு வெளியேறிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இரண்டாவது நாளில் விளையாட மாட்டார் என்றே தெரிந்தது.

பந்து அவரது காலை தாக்கிய நிலையில் காயத்தின் வீரியம் அதிகமாக இருந்த காரணத்தால் அவர் விளையாட மாட்டார் என்றே அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இரண்டாவது நாளில் சில விக்கெட் விழுந்த பிறகு மீண்டும் களமிறங்கிய ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வரும் போது அனைத்து ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டார். ஓட முடியாத நிலையிலும் சில அதிரடி ஷாட்களால் அரை சதத்தை அவர் கடந்த நிலையில் 54 ரன்கள் எடுத்த பிறகு ஆர்ச்சரின் பந்துவீச்சில் வெளியேறினார். இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் முடிவில் 358 ரன்கள் குறித்தது.

- Advertisement -

வரமாட்டார் என நினைத்தேன்

இந்த சூழ்நிலையில் இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறும் போது “இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் விக்கெட் எடுத்த பிறகு அவர் பேட்டிங் செய்ய மாட்டார் என்று அனைவரும் நினைத்தார்கள். அப்போது மைதானத்தைச் சுற்றி அனைத்து விதமான வதந்திகளும் பரவியது. கால் எலும்புகள் உடைந்த நிலையில் அவர் பேட்டிங் செய்ய ஆறு வாரங்கள் தேவை என்று செய்திகள் பரவின. ஆனால் ரிஷப் பண்ட் களம் இறங்கிய பிறகு அது அனைத்தும் முற்றிலுமாக உடைந்தது. இருப்பினும் அவர் பேட்டிங் செய்ய களம் இறங்கிய போது அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்தேன்.

இதையும் படிங்க:தம்பி ரிஷப் மறக்கவே முடியாததை பண்ணிட்ட.. நீ செஞ்சது இந்த 2 விஷயத்தை ஞாபகப்படுத்தும் – சச்சின் பாராட்டு

வர்ணனை செய்து கொண்டிருந்தபோது அவருக்கு எலும்பு முறிவு என்றால், மீண்டும் அவருக்கு ஏதேனும் அடிபட்டால் நிலைமை இன்னும் மோசம் ஆகிவிடும் என்று கேள்விப்பட்டேன். அவர் தனது அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். தற்போதைய இந்திய அணி பற்றி நிறைய பேசலாம். அவர்கள் இந்த சமயத்தில் தங்களது அணிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்” என்று பாண்டிங் பேசியிருக்கிறார்.

- Advertisement -