தற்போது இந்திய கிரிக்கெட்டில் முகமது சிராஜிக்கு சரியான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய பயிற்சியாளர் மற்றும் கேப்டனை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தம் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக முகமது சிராஜ் வந்திருக்கிறார். மேலும் இந்த தொடரை இந்திய அணி சமன் செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” முகமது சிராஜை நாம் அடையாளம் காண தவறிவிட்டோம். தற்போது அதற்கான நேரம் நமக்கு வந்துவிட்டது. அவர் முக்கியமான நேரத்தில் தனது கைகளை உயர்த்தி இருக்கிறார். மேலும் இதெல்லாம் ட்ரைலர் கிடையாது இதுதான் முக்கியமான படமே என்று காட்டியிருக்கிறார்”
“மேலும் தயவு செய்து தன்னை ஒரு வெற்றி போட்டியாளராக கருதுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி ஆன ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர் என நமக்கு நினைவூட்டுகிறார். அவரது பந்து வீச்சு நடவடிக்கை, மற்றும் அவருடைய நுட்பம் மற்றும் நல்ல பணி நெறிமுறை ஆகியவை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக அவரை விளையாட வைக்கிறது”
“சிராஜை பற்றி சிராஜுக்கு எல்லாம் தெரியும். டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் ஜாஸி பாயை நம்புவதாக கூறினார். தற்பொழுது மியான் பாயை நம்புகிறோம். இந்த போட்டியில் பும்ரா இல்லாத நிலையில் சிறப்பாக வந்து போட்டியை வென்று கொடுத்திருக்கிறார். பும்ரா இல்லாத நிலையில் பந்துவீச்சு தாக்குதலை அவர் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறார்”
இதையும் படிங்க : மெக்கலம் கில்லுக்கு தொடர் நாயகன் தர விரும்பல.. கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது? – தினேஷ் கார்த்திக் விளக்கம்
“கிரிக்கெட் கடவுள்கள் சிராஜிடம் நியாயமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஐந்து டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதால் எனக்கு சோர்வாக இருக்கிறது என்று கூறி ஓய்வெடுத்து இருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இப்படியானவற்றை கிரிக்கெட் கடவுள்கள் அங்கீகரிக்கிறார்கள். சிராஜ் ஒரு அரிய வீரர். இந்தியாவிலிருந்து இப்படி ஒரு வீரர் முதலில் கிடைத்திருக்கிறார். இவரை நாம் விட்டுவிடக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.