இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கில்லுக்கு தொடர் நாயகன் விருதை தர கடைசி நேரத்தில் இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கலம் விரும்பவில்லை என தினேஷ் கார்த்திக் விரும்பவில்லை.
மேலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி இரண்டு இன்னிங்களிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் அவருடைய அசத்தலான பந்துவீச்சால் இந்திய அணி போட்டியை வென்று தொடரையும் சமன் செய்தது.
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறை
இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரண்டுக்கு இரண்டு என சமநிலை அடைந்த காரணத்தினால், இரண்டு அணிகளிலும் இருந்து தொடர் நாயகன் விருதுக்கு இரண்டு வீரர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு அணியின் பயிற்சியாளர் இன்னொரு அணியில் இருந்து சிறந்த வீரரை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த வகையில் இந்திய பயிற்சியாளர் கம்பீர் இங்கிலாந்தின் புரூக்கை ஆட்டநாயகனாக தேர்வு செய்தார். இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கலம் இந்தியாவின் கேப்டன் கில்லை தொடர் நாயகனாக தேர்வு செய்தார். ஆனால் இந்தியா பக்கத்தில் தொடர் நாயகனாக சிராஜை தேர்வு செய்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
உண்மையில் இதுதான் நடந்தது
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” போட்டி நான்காவது நாளில் முடிவடைந்து இருந்தால் உறுதியாக பில்தான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டு இருப்பார். ஏனென்றால் நான்காவது நாளில் மெக்கலமிடம் விருப்பத்தை கேட்ட பொழுது அதுவரையில் சிறப்பாக செயல்பட்டதை வைத்து அவர் கில்லை தொடர் நாயகனாக தேர்வு செய்தான். இதை போட்டியின் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர் தெரிவித்து இருந்தார்”
இதையும் படிங்க : பரிசளிப்பு விழாவுக்கு ஆண்டர்சன் டெண்டுல்கர் வராதது ஏன்.. பின்னணி காரணம் என்ன?.. மௌனம் காக்கும் இங்கிலாந்து
“ஆனால் ஐந்தாவது நாளில் அவரது முடிவு மொத்தமாக மாறிவிட்டது. கடைசி 40 நிமிடங்களில் முகம்மது சிராஜ் அற்புதமாக செயல்பட்டு இந்திய அனுப்பி வெற்றியை தேடித்தந்ததை மெக்கலம் மிகவும் ரசித்தார். அவர் தனது முடிவையும் மாற்றி இருந்தார். ஆனால் முன்பு அறிவிக்கப்பட்டது போல கில்லுக்கு கொடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.






