ருதுராஜுக்காக கை கூப்பி கேட்டுகிட்டேன்.. அவரை வெளியே அனுப்ப கம்பீருக்கு உரிமை இல்லை – ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள்

0
89
Ruturaj

தற்போது இந்திய ஒரு நாள் அணியில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கும் ருதுராஜூக்கு மேற்கொண்டு இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ருதுராஜுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து மேலும் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பல முன்னால் வீரர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

என்ன நடக்கிறது என்று புரியவில்லை

இதுவரையில் ருதுராஜ் மிடில் ஆர்டரில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடியது கிடையாது. அதே சமயத்தில் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடியவராக ரிஷபப்பட்டு இருந்திருக்கிறார். ஆனால் ருதுராஜை மிடில் ஆர்டரில் அனுப்பிவிட்டு, மிடில் ஆர்டரில் விளையாடும் ரிஷப் பணட்டுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

இதுகுறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரராக மட்டுமே விளையாடி பழக்கப்பட்டவர். ஆனால் அவரை சம்பந்தமே இல்லாமல், அவர் இதுவரை விளையாடியிருக்காத மிடில் ஆர்டரில் அனுப்பி இருந்தார்கள். இறுதியில் அவர் பரிதாபமாக அற்புதமான கேட்ச் மூலமாக வெளியேற்றப்பட்டார்”

- Advertisement -

கை கூப்பி கேட்டேன்

“ருதுராஜ் முதல் போட்டியில் ஆட்டம் இழந்த போது நான் கைகளை கூப்பி அவருக்கு அடுத்த இரண்டு வாய்ப்புகளையும் கொடுங்கள் என்று சொன்னேன். அவர் மேற்கொண்டு தோல்வி அடைந்தாலும் அவரை நிராகரிக்க கூடாது. அவரை மூன்று போட்டிகளில் கொடுக்கும் வாய்ப்பில் மட்டுமே வைத்து மதிப்பிடக்கூடாது. தொடக்க இடத்தில் வாய்ப்பு பெற்று அவர் விளையாடும் வரையில், அவர் குறித்து தீர்ப்பு சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது”

இதையும் படிங்க : விராட் கோலிக்கு பவுலிங் பண்றது எரிச்சலானது.. அவர்கிட்ட இப்பவும் அந்த விஷயங்கள் மாறவே இல்லை – யான்சென் பேச்சு

“இப்போது ரிஷப் பண்ட் அவரை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர் ஒரு சுத்தமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஆனாலும் நீங்கள் அவரை மிடில் ஆர்டருக்கு தேர்வு செய்ய மாட்டீர்கள். ஆனால் அந்த இடத்தில் இதுவரை விளையாடியிருக்காத இரண்டு வீரர்களை அனுப்பி வைப்பீர்கள்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -