இந்திய கிரிக்கெட்

அடிச்சு சொல்றேன்.. அவர் மட்டும் இல்லனா.. இந்திய அணி கண்டிப்பா ஜெயிச்சி இருக்கும் – ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. தோல்வியடைந்த இந்திய அணியின் மீது தற்போது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தத் தொடர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறுகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மோசமாக செயல்பட்டாலும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதற்குப் பிறகு ரோகித் சர்மா தலைமையில் ஆன இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹாஸில்வுட் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு பதிலாக உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்காட் போலன்ட் வாய்ப்பு பெற்று அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 6 இன்னிங்ஸ்களில் அவர் 21 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்காட் போலண்ட் விளையாடவில்லை என்றால் இந்திய அணி தொடரில் வெற்றி பெற்றிருக்கும் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவர் இல்லனா இந்தியா தான் வெற்றி

இதுகுறித்து அஸ்வின் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு இந்த தொடர் சிறப்பானதாக அமைந்திருக்கிறது. ஆனால் அவர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக போராடினார் என்பது தான் முற்றிலுமான உண்மை. ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலியா அணியில் விளையாடியது அந்த அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஒருவேளை போலந்து விளையாடி இருக்காவிட்டால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும்.

இதையும் படிங்க:பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் ஆடுவாரா? உடல் நிலை குறித்த அப்டேட்.. வெளிவந்த முக்கிய தகவல்

ஜோஸ் ஹேசில்வுட் எந்த தவறும் செய்யவில்லை. அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். ஒருவேளை அவர் காயம் அடையாமல் இருந்து ஆஸ்திரேலியா அணி அதே தாக்குதலை தொடர்ந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். போலந்து இடது கை பேட்ஸ்மேன்களுக்கு விக்கட்டை நோக்கி வீசிய பந்துகள் முக்கிய காரணமாக அமைந்தன” என்று அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by