பாகிஸ்தானில் அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் என்னும் மினி உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் காயமடைந்த பும்ராவின் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நான்கு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியின் பாதியில் இருந்து வெளியேறினார். அப்போது வெளிவந்த தகவலின் படி உம்ராவின் காயம் குணமாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் குழு அறிக்கை வெளியிட்டதாக கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பும்ரா விலகி இருப்பதால் அதற்குப் பிறகு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அவரது வருகை இந்திய அணிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்குப் பிறகு அவரது உடல் தகுதி குறித்து மீண்டும் ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது. அதாவது உம்ரா தற்போது தீவிர படுக்கை ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் குழு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் பும்ராவுக்கு முதுகுப் பகுதியில் வீக்கம் மட்டுமே இருந்தால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளது ஆனால் முதுகு வடத்தில் ஏதேனும் அவர் சிரமப்பட்டால் பாகிஸ்தான் தொடரில் அவர் பங்கு பெற முடியாது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே இன்னும் ஒரு வாரம் கழித்து பும்ரா பெங்களூரில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தளத்திற்கு சென்று அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார். அவருக்கு வீக்கம் மட்டுமே இருந்தால் விரைவாக குணமாகலாம் அல்லது ஏதேனும் பிரச்சனை இருந்தால் குணமடைய பல நாட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கௌதம் கம்பீர் கோபக்காரர்.. அவரால சொல்லதான் முடியும்.. ஆனா போட்டி இவங்க கிட்டதான் இருக்கு – கபில்தேவ் கருத்து
பும்ரா குறித்து வெளிவந்துள்ள தகவலின் படி “பும்ரா அடுத்த வாரம் சிஓஇக்கு செல்லலாம். ஆனால் அவர் செல்வது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை. அவர் தற்போது முழுமையாக வீட்டில் ஓய்வெடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். மேலும் அவரது வீக்கம் குறைந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பும்ரா குறித்த இறுதியான தகவல் கிடைத்த பின்னரே சாம்பியன்ஸ் டிராபி இறுதி அணி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






