இந்திய கிரிக்கெட்

2025 ஐபிஎல் மினி ஏலம்.. சிஎஸ்கே பிளான் மாறிடுச்சு.. இந்த 2 பேர கட்டாயம் வாங்குவாங்க – அஸ்வின் நம்பிக்கை

2026 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கு முன்பாக இந்த மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்த வீரரை வாங்கும்? என ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது பத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியலை கொடுத்து விட்டன. இதைத் தொடர்ந்து ஐபிஎல் மினி ஏலம் இந்த மாதம் மத்தியில் உறுதியாக நடக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

சிஎஸ்கே அணியின் சிக்கல்

சிஎஸ்கே அணி நிர்வாகம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விடுவித்த ஆன்ட்ரே ரசல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் விடுவித்த கிளன் மேக்ஸ்வெல் இருவரையும் வாங்க முடிவு செய்திருந்தது. நிறைய பணம் வைத்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேமரூன் கிரீனை வாங்கும் என்பதால் சிஎஸ்கே இந்த முடிவை எடுத்திருந்தது.

இந்த நிலையில் ரசல் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துவிட்டார். அதே சமயத்தில் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறிவிட்டார். இதனால் சிஎஸ்கேவின் ஏலத் திட்டத்தில் பெரிய பின்னடைவு ஏற்பட்டது.

- Advertisement -

இவர்களை வாங்குவார்கள்

இதுகுறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “இந்த மினி ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கும். இதனால் உமேஷ் யாதவ் கூட ஒரு குறிப்பிட்ட தொகைக்கு போகலாம். இந்த வகையில் காஷ்மீரின் வேகப்பந்துவீச்சாளர் அகிப் நபிக்கு ஏலத்தில் வரவேற்பு இருக்கும். சிஎஸ்கே அவரை வாங்கலாம். ஆனால் அவரை பேக்கப் வீரராக வைக்கவே அதிக வாய்ப்பு உள்ளது”

இதையும் படிங்க : இந்தியா தோல்விக்கு ஜடேஜாதான் காரணம்.. இப்ப சொல்லல அப்பயே சொன்னேன்.. இது சரி இல்ல – இர்பான் பதான் பேச்சு

“தற்போது ஏலத்தில் ரசல் மற்றும் மேக்ஸ்வெல் இல்லை. எனவே உறுதியாக சிஎஸ்கே வெங்கடேஷ் ஐயருக்கு செல்லும். மேலும் மேக்ஸ்வெல் இல்லாததால் அந்த இடத்திற்கு லிவிங்ஸ்டனை வாங்க முயற்சி செய்யும். இந்த இரண்டு வீரர்களுக்கும் சிஎஸ்கே முதலீடு செய்யும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by