இந்தியா தோல்விக்கு ஜடேஜாதான் காரணம்.. இப்ப சொல்லல அப்பயே சொன்னேன்.. இது சரி இல்ல – இர்பான் பதான் பேச்சு

0
15
Irfan

இந்திய அணி நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைத்ததற்கு ஜடேஜாவின் மெதுவான பேட்டிங் ஒரு காரணமாக இருந்தது என இர்ஃபான் பதான் குற்றம் சாட்டி இருக்கிறார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக விளையாடி 358 ரன்கள் குவித்தது. ஆனாலும் ஒரு கட்டத்தில் 380 முதல் 400 ரன்கள் எடுக்கும் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜடேஜா மெதுவாக ஆடினார்

இதுகுறித்து பேசி உள்ள இர்ஃபான் பதான் கூறும் பொழுது “எனக்கு நேற்றைய போட்டியில் ஒரு பிரச்சனை இருந்தது. அது என்னவென்றால், அது ஜடேஜாவின் பேட்டிங். அவர் 27 பந்துகளை சந்தித்து கடைசியில் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அது மிக மெதுவான பேட்டிங் காக இருந்தது. நாங்கள் இது இந்திய அணிக்கு பிரச்சினையாக மாறும் என்று கிரிக்கெட் கமெண்ட்ரியில் சொல்லிக் கொண்டிருந்தோம்”

“இறுதியில் அது அப்படியே ஆனது. நீங்கள் 300 ரன்களுக்கு மேல் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் 88 என இருப்பது சரி கிடையாது. நீங்கள் மிகவும் நிதானமாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. சில நேரங்களில் மெதுவான எ இன்னிங்ஸ் வரத்தான் செய்யும். ஆனால் ஜடேஜாவின் இண்டெண்ட் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது”

- Advertisement -

இதை இப்போது சொல்லவில்லை

“அவருடைய இன்டென்ட் இன்னும் கொஞ்சம் அதிரடியாக விளையாடும் படி இருந்து இருக்கலாம். இதை நான் பின்னோக்கி பார்த்து இப்பொழுது சொல்லவில்லை. அவர் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே கிரிக்கெட் கமெண்ட்ரியில் சொன்னேன். பந்து நனைந்த ஈரமாகும் பொழுது அது பந்து வீசும் அணிக்கு பிரச்சனையாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவின் திட்டம் நல்ல முறையில் தொடங்குவதாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் ஜடேஜா அதிரடியாக விளையாடாதது சரியில்லை”

இதையும் படிங்க : விராட் கோலியுடன் போட்டி போட்ட ருதுராஜ்.. தோல்விக்குள் வெற்றி.. தோற்றாலும் கொண்டாடுங்கள்.. அபிசேக் நாயர் பேச்சு

தற்பொழுது இந்திய ஒரு நாள் அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் கீழ் வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணியை ஒப்பிடும் பொழுது அதிரடி ஆட்டக்காரர்கள் கீழ் வரிசையில் இந்திய அணியில் இல்லை. எனவே இந்திய அணி தற்பொழுது பல வகைகளில் மாற்றம் அடைய வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -