இந்திய கிரிக்கெட்

சிஎஸ்கே தனது பிராண்டை தொலைத்து நம்பிக்கை அற்றதாக மாறிவிட்டது.. என்னால நம்ப முடியல – அஸ்வின் வருத்தம்

சிஎஸ்கே அணி தன்னுடைய வீரரை இன்னொரு அணிக்கு டிரேடிங் செய்வது அந்த அணி மீதான நம்பிக்கையை குறைத்து விட்டது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வாங்குவதற்காக ரவீந்திர ஜடேஜாவை விட்டுக் கொடுத்திருப்பது உறுதியாகவே தெரிகிறது. இது பழைய சிஎஸ்கே அணியின் குணம் கிடையாது என ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இது சிஎஸ்கே இல்லை

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும் பொழுது ” ரவீந்திர ஜடேஜா விஷயத்தை நான் உணர்வு பூர்வமாக அணுகவில்லை. ஆனால் அதே சமயத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வெளிப்படுத்தி வரும் வருத்தமான உணர்வு நியாயமானது. இது பழைய சிஎஸ்கே இல்லை. சிஎஸ்கேவின் அடையாளம் ஸ்ரத்தன்மை மற்றும் வீரர்கள் மீதான நம்பிக்கை. இப்படித்தான் சிஎஸ்கே ஒரு பிராண்டை உருவாக்கியது”

“இது முழுக்க தோனியை சுற்றி கட்டமைக்கப்பட்டது என்பது உண்மை. ஆனால் தற்போது ரவீந்திர ஜடேஜாவை விட்டுத் தருவது என்பதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் இந்த டிரேடிங் முடிவை மீண்டும் மீண்டும் சிந்திக்கிறேன். சிஎஸ்கே எங்கோ ஒரு இடத்தில் தந்திரத்தை இதில் தவற விட்டு விட்டது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

தோனி பிளம்மிங் மாற மாட்டார்கள்

“கடந்த சில நாட்களாக ரவீந்திர ஜடேஜா வெளியேறுவது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வருத்தப்படுவதை நான் பார்த்து வருகிறேன். அவர்கள் இந்த டிரேடிங்கை நிறுத்திக் கொள்ளச் சொல்லி கேட்கிறார்கள். ஆனால் ராஜஸ்தான் அணி தங்களுக்கு தேவையான வீரரை வாங்கிக் கொண்டு விட்டது. சிஎஸ்கே தங்களுக்கு தேவையான முகத்தை வாங்கி கொண்டு விட்டது”

இதையும் படிங்க : நியூசிலாந்து பார்முலாவை பின்பற்றும் தென்னாப்பிரிக்கா.. சதியை கண்டுபிடித்த பயிற்சியாளர்.. சவாலுக்கு கில் தயார் என கருத்து

“இப்படிப்பட்ட மிக முக்கியமான முடிவு சிஎஸ்கே அணியில் தோனி மற்றும் பிளமிங் இருவரும் ஆலோசிக்காமல் நடைமுறைக்கு வர சாத்தியமே கிடையாது. எனவே அவர்களுடைய முடிவின்படியே இது நடந்திருக்கிறது. அவர்கள் இந்த விஷயத்தில் எடுத்த முடிவிலிருந்து மாற மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்” என கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by