இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய பேட்ஸ்மேன்களுக்கு கிடைத்த மரியாதை ஒரு குறிப்பிட்ட இந்திய வீரர்களுக்கு கிடைக்கவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் வருத்தப்பட்டு இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரையில் தொடர்ந்து நட்சத்திர பேட்ஸ்மேன்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். கவாஸ்கரில் ஆரம்பித்து விராட் கோலி, ரோஹித் சர்மா வரை அது தொடர்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் பவுலர்களுக்கு அந்த மரியாதை கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான் விளம்பரம் பண்ண வரல
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து மிகவும் வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதே சமயத்தில் அவருக்குத்தான் விளம்பரம் செய்வதற்காக வரவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நான் பும்ராவை நிறைய முறை புகழ்ந்து இருக்கிறேன். நான் அவரைப் பற்றி சொல்ல வருவது ஒரு விஷயம்தான், அவர் மிகவும் அற்புதமானவர். நான் அவருக்காக விளம்பரம் செய்ய வரவில்லை. நான் ஒரு நாடகக் கலைஞனும் கிடையாது. ஆனால் அவரது திறமையை என்னால் வியக்காமல் இருக்க முடியாது”
பும்ராவுக்கு சரியானது கிடைக்கவில்லை
“இந்தியாவில் சச்சின், விராட் மற்றும் ரோகித் சர்மா போன்றவர்களுக்கு கிடைத்த புகழும் அங்கீகாரமும் இன்னும் பும்ராவுக்கு கிடைக்கவில்லை. நான் அவரை இவர்களுக்கு இணையான வீரர் என்று சொல்கிறேன். ஒரு பந்துவீச்சாளருக்கு இருக்கும் திறமையை விட அவருக்கு கூடுதலாக இருக்கிறது. அவருக்கு மரியாதை கிடைக்கிறது. மேலும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நானும் அவருடைய முதன்மை ரசிகன்தான்”
இதையும் படிங்க : சாம்சனை வாங்க.. சிஎஸ்கே ராஜஸ்தானுக்கு கொடுக்கும் 2 வீரர்கள்.. அனலைசர் பிரசன்னா வெளியிட்ட தகவல்
“பும்ரா முற்றிலும் வித்தியாசமானவர். நான் அவருடனும் அவருக்கு எதிராகவும் விளையாடியிருக்கிறேன் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வேன். அவர் உயர்ந்த தரம் கொண்ட ஒரு வீரர். இவை வேறு மாதிரி சொல்வது என்றால் நம்முடைய பேட்ஸ்மேன் சிலரை விட அவர் மிகவும் சிறந்த வீரர்” என்று கூறியிருக்கிறார்.






