அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு டிரேட் செய்யப்படுவது உறுதி என அனலைசர் பிரசன்னா தெரிவித்திருக்கிறார். மேலும் இதற்காக இரண்டு வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு கொடுக்கப்பட போவதாகவும் கூறியிருக்கிறார்.
தற்போது ஐபிஎல் வட்டாரத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருகிறார் என்கின்ற செய்தி தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய இன்ஸ்டா பதிவுகள் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை பார்வையிட்டது என பல விஷயங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
டிராவிட் உடன் பிரச்சனையா?
ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக ரியான் பராக் உடைய மாமா இருக்கிறார். இவர் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக்கை கொண்டு வருவதற்கு பெரிய அளவில் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவரே ராகுல் டிராவிட்டை அணியின் பயிற்சியாளராகவும் கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக ராகுல் டிராவிட் ரியான் பராக் கேப்டன் ஆவதற்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்றும், மேலும் கேப்டன் பதவி தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஜெய்ஸ்வால் வரை ஏமாற்றமடைந்திருப்பதாகவும், இந்த பிரச்சனைகளால் தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சன் தோனி உடனான நட்பின் காரணமாக சிஎஸ்கே அணிக்கு வர இருப்பதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொடுக்கப்பட போகும் வீரர்கள் யார்
தற்போது சஞ்சு சாம்சனை ட்ரேடு மூலமாக மிகவும் சுமூகமாக வாங்கிக் கொள்ளவே ஏற்பாடுகள் நடைபெற்று அனலைசர் பிரசன்னா கூறியிருக்கிறார். மேலும் அவருடைய டிவிட்டர் பதிவில் இதற்காக இரண்டு வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு கொடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த இரண்டு வீரர்கள் அஸ்வின் மற்றும் சிவம் துபே என்று இப்போதைக்கு தெரிகிறது.
இதையும் படிங்க : எங்களை குறி வச்சு நடுவர் ஏமாத்தறாரு.. நீங்க உடனே விசாரிக்கணும் – வெஸ்ட் இண்டீஸ் கோச் டேரன் சமி புகார்
இது குறித்த அவரது பதிவில் “டிரேட் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன. ஒரு இந்திய ஆஃப் ஸ்பின்னர் மற்றும் டாப் ஆர்டர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடது கை மிடில் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன் இருவர் ராஜஸ்தான் அணிக்கு கொடுக்கப்பட போகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






