மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் மசூம்தாருக்கு நியாயமான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.
இந்திய உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்கள் எடுத்தும் கூட இந்திய அணியில் ஒரு போட்டியில் விளையாடுவதற்கும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரை இந்திய அணிக்கு அறிமுகமாகமலே மிக திறமையான வீரர் ஓய்வு பெற்றார். இந்திய பெண்கள் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்து தற்போது உலகக் கோப்பையை வென்றிருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “மாணவன் தயாரானதும் குரு வந்து விடுவார் என்று சொல்வார்கள். இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது கேப்டன் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் எல்லோரும் தயாராக இருந்தார்கள். அப்பொழுது சிறந்த மனிதரான அமோல் மசூம்தார் வந்தார். நீங்கள் அவரை சக்தே இந்தியா ஷாருக்கான் உடன் ஒப்பிட்டு பேசினீர்கள். ஆனால் நான் இன்னும் இதை கொஞ்சம் விளக்கமாக பேச விரும்புகிறேன்”
” 2024 மற்றும் 2025 இரண்டு ஆண்டுகளும் நமக்கு கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பானவை. ஏனென்றால் நல்ல மனிதர்களுக்கு திறமையாளர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது இந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்திருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்பு சரியான மனிதர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது”
“நல்ல மனிதர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். 2024 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக டி20 உலகக் கோப்பையை வென்றார். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ செய்தும் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. இப்போது அவரைப் போலவே இவருக்கும் நடந்திருக்கிறது”
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கேவுக்கு வர மாட்டார்.. அதுக்கான முக்கிய காரணமே இதுதான் – ஆகாஷ் சோப்ரா பேட்டி
“இவர்கள் நல்ல மனம் கொண்ட சிறந்தவர்கள். இந்த பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருமே மிகவும் நல்லவர்கள். இவர்கள் அணியின் வெற்றிக்காக எதையும் செய்ய எவ்வளவு உழைப்பையும் கொடுக்க தயாராக இருப்பவர்கள். சிறந்த வீரர்கள் எப்போதும் தோற்றுப் போவது கிடையாது அவர்களுக்கு ஒரு நல்ல முடிவு இருக்கும் என்பதற்கு இவர் தற்போது நல்ல உதாரணம்” என்று கூறியிருக்கிறார்.