தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு வரமாட்டார் என ஆகாஷ் சோப்ரா திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் youtube சேனலில் வாஷிங்டன் சுந்தர் நிச்சயமாக குஜராத்தை விட்டு சிஎஸ்கே அணிக்கு வரப்போகிறார் இது 200 சதவீதம் உறுதியான செய்தி என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இதைக் குறித்து நிறைய மறுப்புகள் வர ஆரம்பித்திருக்கிறது.
ஆசிஸ் நெக்ரா மறுப்பு
இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பயிற்சியாளர் ஆசிஸ் நெக்ரா வாஷிங்டன் சுந்தரை தங்கள் அடியில் இருந்து சிஎஸ்கேவுக்கு அனுப்பும் எந்த யோசனையும் கிடையாது என தெரிவித்து விட்டதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் ஒரு பக்கம் கொல்கத்தா அணி தங்களுக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பிங் ஓபனிங் பேட்ஸ்மேன் வேண்டுமென்று விரும்புகிறது. கே.எல் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன் இருவரில் ஒருவர் கிடைத்தால் அந்த அணிக்கு நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் பிரச்சனை தீர்ந்து விடும். நடக்குமா? என்றும் இன்னும் முடிவாகவில்லை.
வாஷிங்டன் சுந்தர் செல்ல மாட்டார்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” ஒரு முக்கியமான செய்தி வந்திருக்கிறது அது வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே செல்வா என்பதுதான். ஆனால் குஜராத் அணியில் வாய்ப்புகள் குறைவாக கிடைத்தாலும் அவர் சிஎஸ்கே செல்ல மாட்டார் என்று நான் நினைக்கிறேன். சூழ்நிலை மற்றும் அமைப்பு குஜராத் அணிக்குள் சிறந்ததாக இருப்பதால் தான் அந்த அணியை விட்டு செல்ல விரும்பவில்லை என வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்”
இதையும் படிங்க : எமர்ஜிங் ஆசியா கப்.. இந்திய அணி அறிவிப்பு.. சூரியவன்சிக்கு வாய்ப்பு.. பாகிஸ்தான் அணிவுடன் மோதல்
“தற்போது சிஎஸ்கே அணியை விட்டு அஸ்வின் போய்விட்டதால் அந்த இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் மிகவும் பொருத்தமாக இருப்பார். அவரும் சென்னையைச் சேர்ந்தவர்தான் என்பது முக்கியமானது. ஆனால் குஜராத் அவரை அவ்வளவு எளிதில் விட்டு விடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






