தோனி கிடையாது.. சிஎஸ்கே-வில் இடம் கிடைக்க உதவிய முன்னாள் இந்திய கேப்டன்.. அஸ்வின் வெளியிட்ட தகவல்

0
84
Ashwin

முதன் முதலில் ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்க, 2009ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழக வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதிலிருந்து அவர் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2010 ஆம் ஆண்டு முதல் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எல்லா போட்டிகளிலும் விளையாடும் வீரராக மாறி இருந்தார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை பெற்று 2016 ஆம் ஆண்டு புனே அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் சென்று விளையாடினார். 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் மெகா ஏலமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் திரும்ப வந்தது.

- Advertisement -

அப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாள வீரராக உருவாகியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கட்டாயம் வாங்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏல நெருக்கடியின் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்க முடியவில்லை.

இதற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு மற்றும் 19ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டு இருந்தார். பின்பு டெல்லிக்கு திரும்பிய அவர் தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்.

சிஎஸ்கே அணியில் இடம் கிடைக்க யார் காரணம்

தற்போது அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளையும், நூறாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் விளையாடி முடித்திருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ஒரு கோடி பணம் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் சார்ந்த முக்கியமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் இறுதியாக ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும் பொழுது “நான் இப்போது இந்த நிகழ்வை இன்று சொல்லாவிட்டால் எனக்கு இந்த இரவு என்னால் தூங்க முடியாது. நான் 2008ஆம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் அணியை எதிர்த்து ஜாலி ரோவர் அணிக்கு விளையாடினேன். அந்த போட்டியில் நான் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தேன். அந்தப் போட்டிக்கான நிகழ்ச்சியில் அன்று இரவு சிறப்பு விருந்தினராக ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது ‘அஸ்வின் நீங்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினீர்கள். நீங்கள் சிஎஸ்கே அணிக்கு சென்று முத்தையா முரளிதரன் இடம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க : நிம்மதி பெருமூச்சு விட்ட சிஎஸ்கே.. காயமடைந்த வீரர் வருகை.. ரசிகர்கள் மகிழ்ச்சி

நான் 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இல்லாததால் வருத்தமாக இருந்தேன். அந்த நேரத்தில் உள்நாட்டு வீரர்களை ஏலம் மூலம் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் ஸ்ரீகாந்த் அவர்கள் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் சாரை பார்த்து ‘ நீங்கள் அஸ்வினை சிஎஸ்கே அணியில் சேர்க்கவில்லையா? என்று கேட்டார். அடுத்த நாளே எனக்கு சிஎஸ்கே அணியில் இருந்து ஒப்பந்தம் கிடைத்தது” என்று கூறியிருக்கிறார்.