மக்கள் இப்படி கேட்கும் போதே.. வெளிய போறது எனக்கு நல்லது.. இல்லனா ரொம்ப சிக்கல்.. ஓய்வு குறித்து அஸ்வின் விளக்கம்

0
101

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு தனது ஓய்வினை அறிவித்தார்.

இது அப்போது முதல் சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்த நிலையில் அஸ்வின் அது குறித்து தகுந்த விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -

திடீரென ஓய்வை அறிவித்த அஸ்வின்

இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்த சுழல் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருந்த போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத விதமாக தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் உலகில் பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அஸ்வின் எடுத்தது சரியான முடிவு என சிலரும், அஸ்வின் இப்படி பாதியில் இந்திய அணியை விட்டுச் சென்றிருக்கக் கூடாது என்று சிலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இருப்பினும் சிலர் அஸ்வினுக்கு தகுந்த பிரியாவிடை கொடுத்திருக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இது போன்ற கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் அது குறித்து தற்போது அத்தகைய கருத்துக்களுக்கு விளக்கம் கொடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது யார் என்ன சொன்னாலும் எனது நேரம் முடிந்து விட்டதாக நான் நினைக்கும் போது ஓய்வு முடிவை அறிவித்தேன் என்று சில கருத்துக்களை அஸ்வின் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஓய்வை அறிவிக்க காரணம் இதுதான்

இதுகுறித்து அவர் விவாக கூறும்போது “நான் நிறைய யோசிக்கிறேன், வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து. மேலும் எனது உள்ளுணர்வின்படி என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்கிறேன். ஒருவருக்கு தங்கள் வேலை முடித்து விட்டது என்று தெரிந்தால் அதற்குப் பிறகு அது குறித்து சிந்திக்க எதுவும் இருக்காது. மக்கள் இதுகுறித்து நிறைய விஷயங்கள் சொன்னார்கள், ஆனால் நான் அது குறித்து எதுவும் சிந்திக்கவில்லை. என்ன நடந்தது என்று பார்த்தால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினேன், இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை மூன்றாவது விளையாடினேன்.

இதையும் படிங்க:169 ரன்.. 7 ரன்னை தாண்டாத 7 பேர்.. சூப்பர் கிங்ஸ் அசத்தல் பவுலிங்.. டி காக் போராட்டம் வீண்.. எஸ்ஏ டி20 லீக்

நான் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் அதற்கடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் விளையாடி இருக்கலாம். இவ்வளவுதான், அந்த நேரத்தில் என்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைத்தேன். அதனால் ஓய்வை அறிவித்தேன் இது மிக எளிமையானது. நான் பந்தோடு வெளியே வந்து மக்கள் கைதட்டினால் என்ன வித்தியாசம். என் ஓய்வு குறித்து ஒரு வாரம் பேசுவார்கள் அதற்குப் பிறகு மறந்து விடுவார்கள் அவ்வளவு தான். ஆனால் அது எனக்கு வேண்டாம் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. நான் மகிழ்ச்சியோடு விளையாடினேன். நான் இன்னும் அதிக கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். மக்கள் ஏன் என்று கேட்கும் போது கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பது எப்போதும் நல்லது என்று நினைக்கிறேன். ஏன் கூடாது என கேட்கும் போது முடிப்பது சிறந்தது அல்ல” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -