169 ரன்.. 7 ரன்னை தாண்டாத 7 பேர்.. சூப்பர் கிங்ஸ் அசத்தல் பவுலிங்.. டி காக் போராட்டம் வீண்.. எஸ்ஏ டி20 லீக்

0
585

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீப் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜோபர் சூப்பர் கிங்ஸ் அணியும் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய ஜோபர் அணி 28 ரன் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

எஸ்ஏ டி20 லீக் தொடர்

கர்ப்பணியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜோபர்க் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் டு பிளசிஸ் 1 ரன்னில் வெளியேற மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கான்வே 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய டுப்ளாய் நிதானமாக விளையாடி 32 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அதற்குப் பின்னர் பேர்ஸ்டோ 26 ரன், பெரிரா 26 ரன் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஜோபர்க் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது.

பந்துவீச்சில் ஓரளவு நன்றாக செயல்பட்ட சூப்பர் ஜெயின்ஸ் அணி வீரர்களில் சுப்ரயென், வோக்ஸ் மற்றும் மகாராஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பென்டன் கிங் 17 ரன், பிரீட்க் 7 ரன்னில் வெளியேற மூன்றாவது வரிசையில் களமிறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் குயின்டன் டிகாக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

டிகாக் போராட்டம் வீணானது

ஆனால் அவரோடு யாரும் சரியாக பாட்னர்ஷிப் அமைக்கவில்லை. அவரோடு களம் இறங்கிய மல்டர் ஒன்பதரன் ஜே ஸ்மித் டக் அவுட்டில் வெளியேற இறுதிக்கட்ட பேட்ஸ்மேன் கிளாசன் ஓரளவு நன்றாக விளையாடினார். 17 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். மறுமுனையில் போராடிய டிக்காக் 45 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 55 ரன்கள் குவித்தும் இறுதி வரை போராட முடியவில்லை.

இதையும் படிங்க:விராட் கோலி டைம் முடிஞ்சது.. இப்போ அவர் மனசுல இதுதான் ஓடிட்டு இருக்கும் – இங்கி டேவிட் லாயிட் பேட்டி

அதற்குப் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் வரிசையாக வெளியேறியதால் சூப்பர் செயின்ஸ் அணி 18 ஓவர்களில் அணைத்து விக்கட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர் அணி வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்வது. 55 ரன்கள் குவித்து கடைசிவரை போராடிய டிகாக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -