அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் தொடர்வது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் வெளிப்படையான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒன்பது புள்ளி 75 கோடி ரூபாய் கொடுத்து ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி அவருடைய பந்துவீச்சு மேலும் பேட்டிங் செயல்பாடுகள் சிறப்பாக அமையவில்லை.
சிஎஸ்கே அணி இந்த முறை பிளே ஆப் சுற்றை எட்ட வில்லை. மேலும் முதல் முறையாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்துக்கு சரிந்தது. இத்துடன் பவர் பிளேவில் பந்து வீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பான முறையில் செயல்பட முடியவில்லை. 14 வயது சூரியவன்சி வரையில் அவரது பந்துவீச்சை எளிதாக அடித்து விளையாடினார்கள்.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினின் தனிப்பட்ட ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய வந்திருக்கிறார். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அவர் 14 போட்டிகளில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு பெற்றார். இதுவெல்லாம் சேர்த்து அவருடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
இது குறித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நான் சிஎஸ்கே அணியில் தொடர்வது என்னுடைய கையில் இல்லை. நான் இப்போதைக்கு அவர்களிடம் தெளிவு மட்டுமே கேட்டு இருக்கிறேன். நான் இந்த தெளிவை நீண்ட காலத்திற்கு முன்பே அவர்களிடம் கேட்டு விட்டேன். ஆனால் இதுவரையில் அவர்களிடமிருந்து எனக்கு பதிலும் தொடர்பும் எதுவும் இல்லை. ஐபிஎல் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுதே நீங்கள் என்னுடைய பங்கு என்ன? நான் இப்படி சிறப்பாக செயல்பட முடியும்” என்று கேட்டேன்”
இதையும் படிங்க : 14 வயது சூரியவன்சிக்கு.. பிசிசிஐ சிறப்பு ஏற்பாடு.. அடுத்த சச்சினுக்கு திட்டம்.. மாஸ் சம்பவம் – என்ன நடந்தது?
“நான் இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அனைத்து போட்டிகளையும் விளையாடி இருக்கிறேன். முதல் முறையாக இந்த வருடம் 9 போட்டிகள் மட்டுமே விளையாடினேன். இதனால்தான் நான் செய்யக்கூடிய நிர்வாகத்திடம் தெளிவு கேட்டேன். மேலும் சாம்சன் இங்கு வருகிறாரா நான் ராஜஸ்தான் செல்கிறேனா என்பது குறித்து எதுவும் எனக்கு சொல்லப்படவில்லை. சிஎஸ்கே அணி நிர்வாகம் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. இதில் எந்த ரகசியமும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.