ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷீப் சிங் பரிமாற்றம் குறித்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
.
இந்த வர்த்தகம் குறித்து சடகோபன் ரமேஷ் பேசும்போது, “இது ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த ட்ரேட்களில் ஒன்றாகும், ஏெனெனில் இதில் இடம்பெற்றுள்ள இருவரும் மிகவும் திறமையான தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாவார்கள்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவின் திறன் குறித்து அவர் மேலும் பேசுகையில், “ஹர்திக்கைப் பொறுத்தவரை பிட்னஸ் மட்டுமே ஒரு பிரச்சினையாக உள்ளது, அவர் முழுமையான உடற்தகுதியுடன் இருக்கும்போது அசாத்தியமான வீரராக மாறுவார்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சடகோபன் ரமேஷ் மேலும் பேசும்போது, “நான் எப்போதுமே ஹர்திக்கை ஒரு நம்பமுடியாத வீரராகவும், அதே நேரத்தில் மோசமான கேப்டனாகவே இருந்திருக்கிறார், எனவே அவர் பஞ்சாப் அணிக்கு கேப்டன் பதவியில்லாமல் வெறும் வீரராக மட்டுமே செல்வது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும்” என்று ஆழமாக வலியுறுத்தி இருக்கிறார்.