இந்திய வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி தனது கிரிக்கெட் பயணம் குறித்தும், எதிர்பாராத விதமாக தனக்குக் கிடைத்த வெள்ளைப்பந்து வாய்ப்பு குறித்தும் மனம் திறந்துள்ளார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அவிப் நபி, உள்நாட்டுத் தொடர்களில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் மூலம் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவிப் நபி பேசும்போது “நான் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்காக எப்போது விளையாடினாலும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் எனது ரெக்கார்ட் நன்றாகவே இருக்கும். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு ஒயிட் பால் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு ரெட் பால் கால்-அப் அதாவது டெஸ்ட் போட்டிக்கான வாய்ப்பைத்தான் எதிர்பார்த்திருந்தேன். இருப்பினும், எனது திறமையை நிரூபிக்க இது ஒரு சிறந்த ஆப்பர்சூனிட்டி ஆகும்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து அவர் பேசும்போது “எங்களிடம் கூடுதல் வேகம் இல்லாவிட்டாலும், நான் எனது ஸ்கில்ஸ் அதாவது திறமையைத்தான் முழுமையாக நம்புகிறேன். உள்நாட்டு கிரிக்கெட்டில் நான் எதைச் செய்து வெற்றி பெற்றேனோ, அதே பலத்தைத்தான் இங்கேயும் நம்பி களமிறங்குகிறேன். நியூசிலாந்து பிட்ச்களில் ஸ்விங் செய்வதைவிட சீம் மூவ்மென்ட்டை நம்பி பந்துவீசுவது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்துள்ளேன். அணியின் மூத்த வீரர்களின் ஆலோசனைகளும் இந்த கண்டிஷன்களில் பந்துவீச எனக்கு பெரிதும் உதவி வருகிறது” என்று கூறி இருக்கிறார்.