இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் 14 வயது இளம் வீரர் சூரியவன்சிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டின் இறுதி கட்டத்தில் இருப்பதால் புதிய சூப்பர் ஸ்டாரை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
மேலும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு இங்கிலாந்து சென்ற வைபவ் சூரியவன்சி மிகச் சிறப்பான முறையில் அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து ரசிகர்களும் பாராட்டினார்கள்.
பிசிசிஐ சிறப்பு ஏற்பாடு
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அழைத்து சிறிய பயிற்சி முகாமில் சேர்த்தது. இதைத்தொடர்ந்து அந்த பயிற்சி முகாம் முடிந்ததும் தேசிய கிரிக்கெட் அகாடமி ஆகஸ்ட் 10ஆம் தேதி அவரை அழைத்து உயர்திறனுக்கான சிறப்பு பயிற்சிகளை அளிக்க ஆரம்பித்திருக்கிறது.
இந்த பயிற்சியில் முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடுவது, சூழ்நிலைக்கு தகுந்தது போல் விளையாடுவது, மேலும் நிலைத்தன்மையை அதிகரிப்பது போன்ற முக்கியமான விஷயங்களில் பயிற்சி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஸ்டார் வீரர்கள் வெளியேறிய காரணத்தினால், அடுத்து உலகம் முழுவதும் கவனிக்கப்படக்கூடிய ஒரு வீரரை உருவாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
சூரியவன்சி பயிற்சியாளர் விளக்கம்
இது குறித்து வைபவ் சூரியவன்சி பயிற்சியாளர் மணிஷ் ஓஜா கூறும் பொழுது “இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்காலத்தை பார்க்கிறது. ஏனென்றால் மூத்த வீரர்கள் வரிசையாக ஓய்வு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்ப இளம் வீரர்கள் தயாராக வேண்டும். இந்த வகையில் இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்”
இதையும் படிங்க : கில் இப்ப செஞ்ச அது மற்ற இந்திய வீரர்களுக்கான எச்சரிக்கை.. பையன் தரமான சம்பவம் – கவாஸ்கர் பாராட்டு
“முதல் பந்தில் இருந்தே சூரியவன்சி தாக்கி ஆடக்கூடிய சிறப்பு திறமையை பெற்றிருக்கிறார். இது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதே சமயத்தில் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தேவையான நிலைத்தன்மை அவருக்கு தேவைப்படுகிறது. தற்போது இதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படும். இதன் மூலம் அவரால் பத்து போட்டியில் ஏழு முதல் எட்டு போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று கூறி இருக்கிறார்.






