8 வருட கெயில் மெகா சாதனை.. நூலிழையில் தவறவிட்ட அமெரிக்க வீரர்.. அஸ்வின் பாராட்டு

0
1450
Ashwin

இன்று அமெரிக்கா டல்லாஸ் மைதானத்தில் ஐசிசி நடத்தும் ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான போட்டியின் மூலம் தொடங்கியது. இந்த போட்டியில் அமெரிக்க பேட்ஸ்மேன் ஆரோன் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி அமெரிக்க அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த கனடா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் நவ்நீத் தல்வால் 44 பந்துகளில் 61 ரன்கள், நிக்கோலஸ் கிர்டன் முப்பத்தி ஒரு பந்தில் 51 ரன்கள் எடுத்தார்கள். கனடா அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய அமெரிக்கா அணிக்கு எடுத்ததும் அதிரடி துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டம் இழந்து விட்டார்கள். இதற்குப் பிறகு கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் இருவரும் சேர்ந்து வெறும் 58 பந்தில் 13 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினார்கள். இதில் ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 94 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார். அமெரிக்கா அணி 17ஆவது ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு வென்றது.

இந்த போட்டியில் ஆரோன் ஜோன்ஸ் 10 சிக்ஸர்கள் அடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 11 சிக்ஸர்கள் அடித்திருந்ததே டி20 உலகக்கோப்பையில் ஒரு பேட்ஸ்மேன் ஒரு போட்டியில் அடித்த அதிகபட்ச சிக்ஸர் சாதனையாக இருந்தது. தற்போது அருண் ஜோன்ஸ் ஒரு சிக்ஸர் அடிக்க முடியாமல் தவறவிட்டிருக்கிறார். மேலும் இவரும் வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க அணி சொந்த நாட்டில் சில நாட்களுக்கு முன்பு பங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றி இருந்தது.

இந்த நிலையில் வெற்றி பெற்ற அமெரிக்க அணிக்கு வாழ்த்து கூறிய ரவிச்சந்திரன் அஸ்வின் ” ஆரோன் ஜோன்ஸ் சியாட்டில் ஆர்காஸ் அணிக்காக விளையாடுகிறார். இன்று இரவு அவர் டி20 உலக கோப்பை தொடரில் முதல் போட்டியை ஒளிரச் செய்ய அற்புதமான பேட்டிங் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 16 வயசு அந்த பையனிடம் பேசினேன்.. அதில் இருந்து தான் வெளியே வந்தேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக பங்களாதேஷ் அணியை அமெரிக்கா ஏன் வீழ்த்த முடிந்தது என்பதை இன்று மீண்டும் காட்டி இருக்கிறது” என்று புகழ்ந்து பாராட்டி இருக்கிறார். இந்தியா இடம் பெற்றுள்ள குழுவில்தான் இந்த இரண்டு அணிகளும் இடம்பெற்று இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.