16 வயசு அந்த பையனிடம் பேசினேன்.. அதில் இருந்து தான் வெளியே வந்தேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
127
Hardik

இந்திய அணி நேற்று டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா நம்பிக்கை அளிக்கும் விதமாக பேட்டிங் செய்தார். இந்த நிலையில் கடினமான காலகட்டத்தில் இருந்து எப்படி வெளியே வருகிறார்? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவை எடுத்துக் கொண்டால் கடந்த இரண்டு வருடங்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த காரணத்தினாலும், அந்த அணியில் நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாத காரணத்தினாலும், அவர் பேட்டிங்கில் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

இதன் காரணமாக ஃபினிஷர் ரோலில் செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா ஒட்டுமொத்தமாக தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சரியானதாக இருந்தாலும் அவருக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு சரியானதாக இல்லை. மேலும் அங்கிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக வந்த பின்பு பிரச்சனைகள் பெரிய அளவில் மாறியது.

இதையெல்லாம் தாண்டி எப்படி வெளியே வந்தார் என்பது குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது 16 வயதில் இருந்த ஹர்திக் பாண்டியாவை விட 30 வயதில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு எல்லாமே எளிமையான விஷயம். எனவே நான் 16 வயதில் இருந்த ஹர்திக் பாண்டியாவிடம் திரும்பி சென்றேன். அவரிடம் நீங்கள் இப்படியான சூழ்நிலைகளில் எப்படி சிறப்பாக செய்தீர்கள்? ஏன் செய்தீர்கள் என்று கேட்டேன்.

அந்த நேரத்தில் எனக்கு வசதிகளோ வாய்ப்போ எதுவும் கிடையாது. எனவே நான் இப்பொழுது அந்த 16 வயது இளம் ஹர்திக் பாண்டியா ஜோனில் இருக்கிறேன். ஏனென்றால் அவர்தான் என்னுடைய உண்மையான ஊக்குவிப்பாளர். அந்த ஹர்திக் பாண்டியா சரியான மேடையை அமைக்கவில்லை என்றால் நான் இப்பொழுது இருந்திருக்க மாட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் இது உலககோப்பை.. ஐபிஎல் கிடையாது.. இத செய்யலனா கஷ்டப்படுவிங்க – கைஃப் அட்வைஸ்

இறுதியாக என்ன நடந்தாலும் நாம் நம்முடைய போரில் இருக்க வேண்டும். வாழ்க்கை உங்களை கடினமான சூழ்நிலைகளில் தள்ளுகிறது. ஆனால் நீங்கள் விளையாட்டை விட்டோ காலத்தை விட்டோ வெளியே போகக்கூடாது. அப்படி நீங்கள் வெளியேறிவிட்டால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. எனக்கு இதேபோல் நிறைய முறை நடந்திருக்கிறது. இதிலிருந்து நான் வெளியே வருவேன்” என்று கூறி இருக்கிறார்.