இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நைட் வாட்ச்மேனாக வந்து அழைத்ததும் அடித்த ஆகாஷ் தீப் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் நிலைத்து நின்று விளையாடிய ஆகாஷ் தீப் 94 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தினார். அவரது பேட்டிங் செயல்பாடு பற்றி பலரும் வெளியில் பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ரவீந்திர ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அரை சதங்கள் அடித்தார்கள். ஆனாலும் நாம் முதலில் ஆகாஷ் தீப்பை பாராட்ட வேண்டும். அவர் கொடுத்த தொடக்கம் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக முடித்து வைத்து விட்டது”
” இவருக்கு பேட்டிங் திறமை அதிகம். ஆஸ்திரேலியாவில் ஃபாலோ-ஆனை தவிர்க்க சிறப்பாக விளையாடினார். அவரால் சராசரி பந்துகளை நன்றாக விளையாட முடியும். மேலும் அவர் அழகான ஆப்சைட் பேட்ஸ்மேன். ஆனால் உள்ளே வரும் பந்துகள் அவருக்கு தொந்தரவாக இருந்தது. இதை புரிந்து கொள்ள இங்கிலாந்து பவுலர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. இதுதான் இங்கிலாந்து அணியின் பிரச்சனையாக இருந்து வருகிறது”
“வாஷிங்டன் சுந்தருக்கு பேட்டிங் திறமை அதிகம் இருக்கிறது என்று நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். அவருக்கு நல்ல பலமும் இருக்கிறது. நேற்று அவருடைய மொத்த சக்தியும் வெளிப்பட்டது. அவர் அந்த புல் ஷாட்டுகளை அடுத்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இது உண்மையிலே மிகவும் நல்ல அறிகுறி”
இதையும் படிங்க : பும்ரா இல்லனா விக்கெட் எடுக்கிற ரகசியம் அதுதானா? – டிகே கேள்விக்கு சிராஜ் அசத்தலான பதில்
“ஜடேஜாவுக்கு இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் இருக்கிறது. அதற்குப் பிறகு அவர் செய்து வந்த வேலையை பேட்டிங் பவுலிங் என வாஷிங்டன் சுந்தர் செய்வார். இந்தியாவில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளில் ஏழாவது இடத்தில் ஜடேஜா, எட்டாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர், ஒன்பதாவது இடத்தில் அக்சர் படேல் என்று இருக்கப் போவது, மிகப்பெரிய பலமான பேட்டிங் யூனிட்டாக இந்திய அணியை மாற்றிவிடும்” என்று கூறியிருக்கிறார்.