இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் முகமது சிராஜிடம் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பும்ரா இல்லாத போது சிறப்பாக செயல்படுவதற்கான ரகசியம் குறித்த கேள்விகளை கேட்டார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடவில்லை. இதுவரையில் இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ள முகமது சிராஜ், இந்தத் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது சிராஜின் வினோத ரகசியம்
பும்ரா உடன் இணைந்து விளையாடாத பொழுது முகமது சிராஜ் விக்கெட் கைப்பற்ற கூடிய அளவு அதிகமாக இருந்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடாத நிலையில் முகமது சிராஜ் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இதுவரையில் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் பும்ரா இல்லாத பொழுது கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. இதனால் அவரால் கூடுதல் விக்கெட்டுகள் எடுக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ் கார்த்திக் கேள்வி
இதுகுறித்து தினேஷ் தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பும் பொழுது “பும்ராவுடன் இந்தியா எப்படி விளையாடுவது அவர் இல்லாத போது எப்படி விளையாடியது என்பதை பாருங்கள். அவர் இல்லாத பொழுது நீங்கள் பந்துவீச்சில் தலைமை பொறுப்பில் இருந்து எழுந்து நின்றீர்கள். பொறுப்பை உணர்ந்து சிறப்பான முறையில் செயல்பட்டீர்கள். நீங்கள் புதிய பந்தில் வீச முடிவதும், கடைசிக் கட்ட பேட்ஸ்மேன்களுக்கு வீச முடிவதும், உங்கள் எண்களை சிறப்பாக்கும். பும்ரா இல்லாத போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
இதையும் படிங்க : சச்சினுக்கு ஆதரவா?.. பீட்டர்சன் முட்டாள்தனமா பேசறார்.. அதை ஏத்துக்கலாம் முடியாது – மைக்கேல் வாகன் விமர்சனம்
இதற்கு பதில் அளித்த சிராஜ் பேசும்பொழுது “எனக்கு பொறுப்பு எப்பொழுதும் பிடிக்கும். பும்ரா எனக்கு சீனியர் பவுலர் என்பதால் எனக்கு ரொம்ப பிடிக்கும். கூடுதல் பொறுப்பு கொடுக்கும் பொழுது அது நம்மை நல்ல முறையில் உணர வைக்கும். மேலும் நான் எப்பொழுதும் அதிக அழுத்தம் என் மீது கொடுத்துக் கொள்ள மாட்டேன். என்னுடைய எளிமையான திட்டங்களை பின்பற்றுவது தான் எனக்கு எப்பொழுதும் பிடித்தமானதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






